இந்த புதிய TENAA பட்டியல் M2001G7AC மாதிரி எண்ணுடன் Redmi K30 5G-ஐ பட்டியலிட்டுள்ளது மற்றும் 10GB RAM வேரியண்டின் குறிப்பைக் கொண்டுள்ளது.
Redmi K30 5G கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Redmi K30 5G 10GB RAM வேரியண்ட் TENAA-வில் காணப்பட்டது, இது 5G போனின் மற்றொரு ஸ்டோரேஜ் வேரியண்டின் வருகையை பரிந்துரைக்கிறது. Redmi K30 மற்றும் Redmi K30 5G போன்கள் இந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த புதிய TENAA பட்டியலில் M2001G7AC மாதிரி எண்ணுடன் Redmi K30 5G உள்ளது. மேலும், இது 10GB RAM ஆப்ஷனை பட்டியலிடுகிறது. 10GB RAM ஆப்ஷன் 256GB ஸ்டோரேஜுடன் வழங்கப்படும். இந்த பட்டியலின் மாதிரி எண் முன்பு கண்ட 12GB RAM ஆப்ஷனின் மாதிரி எண்ணை விட சற்று வித்தியாசமானது. அந்த மாதிரி எண் M2001G7AE ஆகும். M2001G7AC அல்ல.
தற்போது, 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனை சீனாவில் டாப்-எண்ட் மாடலாக Xiaomi வழங்குகிறது. மேலும் இதன் விலை CNY 2,899 (சுமார் ரூ. 29,100). 10GB RAM அல்லது 12GB RAM, எந்த நிறுவனம் வெளியிட முடிவு செய்தாலும், டாப்-எண்ட் மாடலை விட அதிக விலை இருக்க வேண்டும்.
கூடுதல் RAM ஆப்ஷனைத் தவிர, Redmi K30 5G போன் இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதால், TENAA பட்டியலில் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகள் உள்ளன. இந்த போன் MIUI 11-ல் இயங்குகிறது. இதில் 6.67-inch full-HD+ hole-punch டிஸ்பிளே உள்ளது. இது Snapdragon 765G SoC-ஐ பேக் செய்கிறது. இது ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக hybrid microSD card slot வரை (256GB) மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியுடன் வருகிறது.
கூடுதலாக, Redmi K30 5G, 64-megapixel பிரதான கேமரா, 5-megapixel macro lens, 2-megapixel depth சென்சார் மற்றும் 8-megapixel கேமரா கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. போனின் முன்னால், 20-megapixel கேமரா மற்றும் 2 megapixel shooter உடன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இந்த போன் 5G, NFC-ஐ ஆதரிக்கிறது. மேலும், 3.5mm audio jack-ஐ கொண்டுள்ளது.
Redmi K30 5G 12GB RAM Variant Spotted on TENAA, May Launch Soon
Redmi K30, Redmi K30 5G With Dual Selfie Cameras, 64-Megapixel Primary Shooter Unveiled
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Hogwarts Legacy Is Now Available for Free on PC via Epic Games Store: How to Redeem
iOS 26 Code Reportedly Reveals When Apple's Revamped Siri Could Launch Alongside Compatible HomePod
Samsung Galaxy S26 Ultra Reportedly Bags 3C Certification; Could Offer Long-Awaited Charging Upgrade