Redmi K30 மற்றும் Redmi K30 5G ஆகியவை கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் போன்களில் இரட்டை செல்பி கேமராக்கள், குவாட் ரியர் கேமராக்கள், hole-punch டிஸ்ப்ளே மற்றும் Snapdragon SoCs பொருத்தப்பட்டுள்ளன. Redmi K30 5G, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன்அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் TENAA பட்டியல் இப்போது 12 ஜிபி ரேம் வேரியண்டின் இருப்பைக் குறிக்க புதுப்பிக்கப்பட்டுள்ளது. Redmi K30 5G வேரியண்டின் 12 ஜிபி ரேம் வேரியண்ட் விரைவில் இயங்கக்கூடும் என்பதை இது குறிக்கிறது.
Redmi K30 5G மாடல் எண் M2001G7AE உடன் TENAA-வில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியல் இப்போது 12 ஜிபி ரேம் வரை இந்த போன் பேக் செய்யும் என்பதைக் காட்டுகிறது. போன் 512 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை வழங்கும் என்றும் பட்டியல் தெரிவிக்கிறது. முன்னதாக, போன் அதிகபட்சம் 256 ஜிபி ஸ்டோரேஜை வழங்கியது. ஆனால், இப்போது புதிய 512 ஜிபி ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது. Redmi K30 5G-யின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் வேரியண்ட் விரைவில் தொடங்கப்படலாம் என்று இது தெரிவிக்கிறது. ஜியோமியின் முடிவில் இருந்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. மேலும், MI.com இன்னும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பிடத்தை டாப்-எண்ட் மாடலாக பட்டியலிடுகிறது.
Redmi K30 5G உயர்-ரக மாடல் சீனாவில் CNY 2,899 (சுமார் ரூ .29,100), மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடல் இதை விட அதிகமாக விலையிடப்பட வேண்டும்.
Redmi K30 5G, டூயல்-சின் (நானோ + நானோ) slots-ஐ ஆதரிக்கிறது. இது, Android 10 அடிப்படையாகக் கொண்ட MIUI 11-ல் இயங்குகிறது. இந்த போன் 20:9 aspect ratio, 91 percent screen-to-body ratio, Corning Gorilla Glass 5 protection மற்றும் 120Hz refresh rate உடன் 6.67-inch full-HD+ (1080x2400 pixels) hole-punch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த 5G வேரியண்ட் 7nm Snapdragon 765G SoC-யால் இயக்கப்படுகிறது. 64GB, 128GB and 256GB ஆப்ஷன்களில் இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும். மேலும், ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்கு hybrid microSD card slot-ஐ (256GB வரை)ஆதரிக்கிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, Redmi K30 5G குவாட் ரியர் கேமரா அமைப்பை செங்குத்து முறையில் வைக்கிறது. குவாட் ரியர் கேமரா அமைப்பில், f/1.89 aperture உடன் முக்கிய பின்புற கேமராவாக 64 மெகாபிக்சல் Sony IMX686 சென்சார், 1/1.7-inch சென்சார் மற்றும் 6P lens ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரதான கேமராவுக்கு 5 மெகாபிக்சல் macro lens, 2 மெகாபிக்சல் depth சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் 120 degree wide-angle சென்சார் ஆகியவை உதவுகின்றன. முன்புறத்தில், Redmi K30 5G பேக் இரட்டை செல்பி கேமரா அமைப்பில் 20 மெகாபிக்சல் பிரதான முன் சென்சார் மற்றும் சிறந்த portraits-க்கு 2 மெகாபிக்சல் depth சென்சார் உள்ளது.
Redmi K30 5G, side-mounted fingerprint சென்சார் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 5G வேரியண்டின் பெரிய இணைப்பு அம்சங்களில் dual-band 4G/5G ஆதரவு (SA/NSA) மற்றும் 5G Multilink மற்றும் 5G ஸ்மார்ட் அம்சங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும். இரண்டு போன்களில் உள்ள மற்ற இணைப்பு விருப்பங்களில் NFC, 5G GPS, USB Type-C port மற்றும் 3.5mm audio jack ஆதரவு ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்