Photo Credit: Twitter/ Redmi India
ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று இந்தியாவில் விற்பனையைத் தொடங்க உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் விற்பனையைத் தொடங்க உள்ள இந்த போன் குறித்து ஒரு சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்டுள்ளது சியோமி. இந்த போனின் ஸ்பெஷல் எடிஷன் போனும் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சியோமி நிறுவனம், தனது சமூக வலைதள பக்கங்களில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்பெஷல் போன், கோல்டு மற்றும் கருப்பு நிற வண்ணத்தில் இருக்கும் என்பது சியோமி பதிவிட்ட படத்தை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது.
ரெட்மீ இந்தியா ட்விட்டர் பக்கத்தில் இடப்பட்ட ட்வீட்டின்படி, இந்த K20 ப்ரோ ஸ்பெஷல் எடிஷன் போனின் விலை, 4,80,000 ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போன் குறித்து சியோமி இந்தியாவின் இயக்குநர் மனு குமார் ஜெயின், “இந்த போன் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி இருக்கும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அதே நேரத்தில் இந்த புதிய K20 ப்ரோ போனின் சிறப்பம்சங்கள் பற்றியோ, பிற விவரங்கள் பற்றியோ தெளிவான தகவல்கள் இல்லை.
சியோமி ஸ்மார்ட் போன் நிறுவனமானது, தரமான பட்ஜெட் போன்களுக்கு பெயர் போனது. ஆனால், இப்படி விலை அதிகமான போனையும் தற்போது சந்தையில் விட்டுள்ளதன் மூலம் சியோமி, சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களுடனும் போட்டியிடுகிறது.
சியோமி, அதன் 5வது ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடும் வகையிலும் K20 ஸ்பெஷல் எடிஷன் போனை வெளியிடுகிறது என புரிந்து கொள்ளலாம். கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் எம்.ஐ 3 போன் மூலம் சியோமி, இந்திய சந்தையில் அறிமுகமானது.
ரெட்மீ K20 ப்ரோ: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 ப்ரோ ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பைக் கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்