20 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா: வெளியானது 'ரெட்மீ K20, K20 Pro' பிரீமியம் போன்கள்!

விளம்பரம்
Written by Gaurav Shukla மேம்படுத்தப்பட்டது: 28 மே 2019 15:06 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மீ K20 Pro-வில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர்
  • ரெட்மீ K20-யில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர்
  • மற்ற அனைத்து அம்சங்களையும் ஒன்று போல் கொண்டு வெளியாகியுள்ளது K20, K20 Pro

இன்று அறிமுகமான ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro

பல டீசர்கள், பல அறிவிப்புகள், பல தகவல் கசிவுகளை கடந்து, இன்று அறிமுகமானது 'ரெட்மீ K20'. இந்த ஸ்மார்ட்போன் தன்னுடன் 'ரெட்மீ K20 Pro'-வையும் அழைத்து வந்துள்ளது. சியோமியின் துணை நிறுவனமான ரெட்மீ, மே 28-ஆம் தேதியான இன்று, பெய்ஜிங்கில் நடந்த அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி தகவல்களை வெளியிட்டது. தொடர்ச்சியாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்ப்டுத்தி வந்த இந்த நிறுவனத்தின், புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் தான் இந்த ரெட்மீ K20, மற்றும் ரெட்மீ K20 Pro. முன்னதாக இந்த நிறுவனம், இந்த ஆண்டில் மட்டும் ரெட்மீ நோட் 7 தொடரில் மூன்று பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்பதும், அவை 1 கோடிக்கு மேல் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து, தனது முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' லேப்டாப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது, ரெட்மீ நிறுவனம். 

ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: விலை

நான்கு வகைகளில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில்,  6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.

இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு மற்றும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) மற்றும் 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்).

ரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ளது. அதே நேரம், ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களில் வெளியாகவுள்ளது.

சீனாவில், 'ரெட்மீ K20 Pro'-வின் முதல் விற்பனை ஜூன் 1-ஆம் தேதியன்று துவங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 6-ஆம் தேதியன்று ரெட்மீ K20-யின் விற்பனை நடக்கும் என தெரிவித்துள்ளது ரெட்மீ நிறுவனம். இதன் இந்திய அறிமுகம் குறித்து இன்னும் எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!

Advertisement

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் மொத்தம் 3 பின்புற கேமராக்கள் உள்ளது என அறிவித்துள்ள சியோமி நிறுவனம், 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமராவை கொண்டிருக்கும் என அறிவித்துள்ளது. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜர் இதனுடன் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Advertisement

அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது. மற்றபடி ரெட்மீ K20-யும் ரெட்மீ K20 Pro-வும் ஒன்று தான்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth, lag-free performance
  • Appealing design
  • Great battery life
  • Bad
  • Underwhelming low-light camera performance
  • Quite slippery
  • No expandable storage
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 730
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 13-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 6 வருஷம் அப்டேட்! Samsung-ன் புது 5G போன் Galaxy F70e வந்தாச்சு.. லெதர் பினிஷ் டிசைன்ல செம மாஸா இருக்கு
  2. Pixel 10 இப்போ பட்ஜெட் விலையில! அமேசான்ல ரூ. 11,000 வரைக்கும் தள்ளுபடி.. இந்த AI கேமரா மான்ஸ்டரை மிஸ் பண்ணிடாதீங்க
  3. S25 Ultra-வோட விலை மளமளன்னு குறைஞ்சிடுச்சு! இப்போ ரூ. 18,599 வரைக்கும் டிஸ்கவுண்ட்.. அமேசான்ல இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  4. பட்ஜெட் விலையில் ஒரு பவர்ஃபுல் போன்! Oppo K14 லான்ச் நெருங்கிடுச்சு.. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங்னு சிறப்பம்சங்கள் மிரட்டுது
  5. மோட்டோரோலாவின் அடுத்த பிளான் இதுதான்! Moto Buds 2 Plus டிசைன் லீக்.. செம ஸ்டைலான புது கேஸ்ல வருது
  6. ₹90,000 போன் இப்போ ₹57,000-க்கு! Vivo X100 Pro மீது அமேசான் அதிரடி விலைக்குறைப்பு.. டீலை மிஸ் பண்ணிடாதீங்க
  7. இதுதான் சரியான நேரம்! Pixel 9 Pro Fold-க்கு அமேசான்ல ரூ. 52,000 தள்ளுபடி.. ஆஃபர் முடியறதுக்குள்ள அள்ளிக்கோங்க
  8. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  9. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  10. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.