மிகுந்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு, இறுதியாக ரெட்மீ K20 மற்றும் K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்திய அறிமுக தேதியை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். அதன்படி, இந்த ரெட்மீ K-தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜூலை 17 அன்று அறிமுகமாகவுள்ளது. இந்த அறிவிப்பை ரெட்மீ நிறுவனம், தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. முன்னதாக, சியோமி நிறுவனம் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஜூலை 17 அன்று ரசிகர்களுக்காக 'Mi பாப் 2019' நிகழ்வை புது டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில், K-தொடர் ஸ்மார்ட்போன்களை ரெட்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தலாம்.
ரெட்மீ நிறுவனம், தனது டிவிட்டர் பக்கத்தில், ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை உறுதி செய்துள்ளது. இன்னும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு குறிப்பிட்டது போல தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஜூலை 17 அன்று ரசிகர்களுக்காக 'Mi பாப் 2019' நிகழ்வை புது டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தது, சியோமி நிறுவனம். மறுபுறம், இந்த ரெட்மீ ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கான அழைப்புகளையும் விடுத்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஜூலை 17 அன்று இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு புது டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு மதியம் 12 மணிக்கு துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mi fans, are you ready to take on the K? The #RedmiK20 & #RedmiK20Pro are all set to launch on 17th July 2019. Stay tuned to have your minds blown by the Flagship Killer 2.0 ???? ???? #BelieveTheHype
— Redmi India (@RedmiIndia) July 5, 2019
RT if you're excited! pic.twitter.com/yD5xCkelZT
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: எதிர்பார்க்கப்படும் விலை
நான்கு வகைகளில் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) மற்றும் 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்)
சீனாவில், ரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது. அதே நேரம், ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்