முன்னதாக இந்த 'ரெட்மீ K20' ஸ்மார்ட்போன்கள் மே மாதம் சீனாவில் அறிமுகமானது
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது தளத்தில் 'ரெட்மீ K20' ஸ்மார்ட்போன் குறித்து ஒரு டீசரை வெளியிட்டுள்ளது. ரெட்மீ நிறுவனம் வெளியிட்டிருந்த அந்த டீசரில் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 17 அறிமுகமாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த 'ரெட்மீ K20' ஸ்மார்ட்போன், ஃப்ளிப்கார்ட் தளத்தில்தான் விற்பனையாகவுள்ளது என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் கடந்த மே மாதம் அறிமுகமாகி, விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன், 3 பின்புற கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, பாப்-அப் செல்பி கேமரா, ஸ்னேப்ட்ராகன் ப்ராசஸர் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்த 'ரெட்மீ K20' ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேகமாக ஒரு டீசர் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இந்தியாவில் இந்த ரெட்மீ ஸ்மார்ட்போன்கள் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. இந்த ரெட்மீ K20 ஸ்மார்ட்போனன் மாற்றியமைக்கப்பட்டு 'Mi 9T' என்ற பெயரில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 'ரெட்மீ K20' என்ற பெயரிலேயே அறிமுகமாகவுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனுடன் 'ரெட்மீ K20 Pro' ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. அந்த ஸ்மார்ட்போனும், ஃப்ளிப்கார்டில் விறபனைக்காக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: எதிர்பார்க்கப்படும் விலை!
நான்கு வகைகளில் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும் வகையின் விலை, 2,499 யுவான்கள் (25,200 ரூபாய்). 6GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மேலும் மூன்று வகைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அதன் விலைகளை 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்), 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 2,999 யுவான்கள் (30,200 ரூபாய்) என கொண்டுள்ளது.
இதனுடன் வெளியாகியுள்ள மற்றொரு ஸ்மார்ட்போனான ரெட்மீ K20 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது. இவற்றின் விலை 1,999 யுவான்கள் (20,200 ரூபாய்) 2,099 யுவான்கள் (21,200 ரூபாய்) மற்றும் 2,599 யுவான்கள்(26,200 ரூபாய்)
சீனாவில், ரெட்மீ K20 Pro நீலம் (Glacier Blue), சிவப்பு (Flame Red), மற்றும் கருப்பு (Carbon Fiber Black) என மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ளது. அதே நேரம், ரெட்மீ K20 நீலம் (Glacier Blue) மற்றும் சிவப்பு (Flame Red) என இரு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன் அண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டுள்ளது. 6.39 இன்ச் FHD+ திரை(1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம், 91.9 சதவிகித திரை-உடல் விகிதம் என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா கொண்டுள்ள இந்த ரெட்மீ K20 Pro மொத்தம் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது, மற்ற இரு கேமராக்கள் 13 மெகா பிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான மற்றொரு கேமரா. இதன் முன்புற கேமரா, 20 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாட்கள் பேட்டரி பேக்-அப் என்ற உறுதியை அளித்துள்ள சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்பொனில் 4000mAh பேட்டரியை பொருத்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், 27W அதிவேக சார்ஜருடன் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் போன்றே 4G வசதி மற்றும் ப்ளூடூத் v5, வை-பை வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
அனைத்து அம்சங்களிலும் ரெட்மீ K20 Pro-வை போன்றே அமைந்துள்ள ரெட்மீ K20, ப்ராசஸர் செயல்பாட்டில் மட்டும் சற்று வேறுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 27W சார்ஜருக்கு பதில் 18W சார்ஜர் வழங்கப்படவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்