நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ரெட்மீ கோ' ஸ்மார்ட்போன். 5 இஞ்ச் ஸ்க்ரீன் மற்றும் குவால்கோம் பிராஸசருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Xiaomi
8 மெகா பிக்சல் கேமராவுடன் வெளியாகும் 'ரெட் மீ' கோ
சியோமியின் துணை பிராண்ட் ஆன ரெட்மீ தனது ரெட்மீ கோ ஸ்மார்போனை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் அண்ட்ராய்டு கோ தளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் உறுவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
நிறுவனம் சார்பாக வந்த தகவல் படி 5 இஞ்சு ஹெச்டி ஸ்கீரின் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அறியப்படாத குவால்கோம் ஸ்னாப் டிராகன் ப்ராஸசரில் இயங்குகிறது என மட்டுமே தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது ஸ்னாப் டிராகன் 425 SoC-யாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது.
எந்த நாடுகளில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படுமோ, அதன் விலைப்பட்டியலோ, வெளியாகும் தேதியோ அறிவிக்கப்படாத நிலையில் அந்த ஸ்மார்ட்போனில் 3000mAh அளவு பேட்டரி பவரும், 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கலாம் என்னும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி நினைவகத்தை கொண்டுள்ள ரெட்மீயின் இந்த ஸ்மார்ட்போன் 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என நம்பப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series Price in India, Design and Launch Timeline Leaked: Expected Specifications, Features