Remi Go Sale: 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுக விற்பனையைத் தொடர்ந்து ரூ.2,200 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டாவை ஜியோ நிறுவனம் இந்த போனுக்குத் தருகிறது
சியோமி நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட 'ரெட்மி கோ' (Redmi Go) ஸ்மார்ட்போன் இன்று மீண்டும் ஃபிளிப்கார்ட் (Flipkart) மற்றும் எம்ஐ.காம் (Mi.com) தளங்களில் விற்பனைக்கு வெளியானது. குறைந்த விலை மற்றும் பல வசதிகளால் இந்திய மக்களிடையே இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் இந்த இரண்டாவது சேல், போன் ஸ்டாக்கில் இருக்கும் வரை தொடரும். 3,000mAh பேட்டரி, ஹெச்டி திரை மற்றும் 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி போன்ற பல சிறப்பம்சங்களை இந்த ரெட்மி கோ போன் பெற்றுள்ளது.
மேலும் அறிமுக சலுகைகளாக ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி வட்டியில்லா தவணைத் திட்ட வசதி மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு 5% தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதிகொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.4,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதியை கொண்ட மாடல் இந்தியாவில் இன்னும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் வாங்க முடியும்.
அறிமுக விற்பனையைத் தொடர்ந்து ரூ.2,200 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 100ஜிபி இலவச டேட்டாவை ஜியோ நிறுவனம் இந்த போனுக்குத் தருகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் சார்பில் இந்த போனுக்கு கட்டணமில்லா தவணைத் திட்ட வசதி, ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர்க்கு கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி போன்ற வசதிகள் கிடைக்கின்றன.
இரண்டு சிம்-கார்டு வசதிகள் கொண்டுள்ள இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு இயங்குகிறது. மேலும் 5 இஞ்ச் ஹெச்டி திரை, குவாட்-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேமை இந்த போன் கொண்டுள்ளது.
பின்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் மாட்யூலை கொண்டுள்ளது. ஹெடிஆர் அமைப்புகள், ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற பல ஸ்மார்ட் அமைப்புகளை இந்த போன் பெற்றுள்ளது.
இந்த போனில் 8ஜிபி சேமிப்பு வசதி மட்டுமே உள்ள நிலையில் சியோமி நிறுவனம் சார்பில் 128 ஜிபி வரையுள்ள எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இடம் பெற்றுள்ளது. 137 கிராம் மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Battlefield Redsec, Battlefield 6's Free-to-Play Battle Royale Mode, Arrives October 28