இனி எல்லோரும் வாங்கலாம் ஸ்மார்ட்போன்; 'ரெட்மி கோ' பராக்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 19 மார்ச் 2019 17:15 IST
ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் ரூ.4,499க்கு விற்பனை செய்யப்படும் ரெட்மி கோ!
  • ஃபிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது!
  • இந்தியாவில் வரும் மார்ச் 22 முதல் விற்பனைக்கு வரும் ரெட்மி கோ!

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரெட்மி கோ தயாரிப்பு இந்தியாவில் ரூ.4,499க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

ரெட்மி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ நிறுவனமான 'ரெட்மி கோ' இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. சியோமியின் ஆரம்ப நிலை ஸ்மார்ட்போனான இந்த தயாரிப்பு டெல்லியில் நடந்த ஒரு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஆண்ட்ராய்டு கோ தயாரிப்பு கடந்த ஜனவரி மாதம் பிலிப்பையின்சில் அறிமுகமாகி, பின்னர் பிப்ரவரி மாதமே விற்பனைக்கு வெளியானது. அடிப்படை வசதி கொண்டுள்ள போனாக இருந்தாலும் ஹெச்டி திரை, அன்லிமிடட் கூகுள் போட்டோஸ், 3000mAh பேட்டரி மற்றும் சுமார் 20 மொழிகளுக்கு மேல் சப்போர்ட் செய்யும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற பல முக்கிய அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகியுள்ளது.

ரெட்மி கோ விலை, அறிமுக ஆஃபர்கள் மற்றும் ரிலீஸ் தேதி:

இந்தியாவில் 1ஜிபி ரேம்/ 8ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போன்கள் ரூ.4,499 விற்பனை செய்யப்படவுள்ளன. இன்னும் 1ஜிபி ரேம்/ 16ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போன்கள் வெளியாகாத நிலையில் அதைப் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் தெரியவில்லை.

கறுப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிலிப்பையின்ஸில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த தயாரிப்பு ஃபிளாப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ கடைகளில் வரும் மார்ச் 22, மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரெட்மி கோ அறிமுக்கத்தைத் தொடர்ந்து ஜியோ நிறுவனம் சார்பாக ரூ.2,200 கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி வரை இலவச டேட்டாவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ரெட்மி கோ அமைப்புகள்:

இரண்டு சிம்-கார்டு வசதிகள் கொண்டுள்ள இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டு இயங்குகறிது. மேலும் 5 இஞ்ச் ஹெச்டி திரை, குவாட்-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேமை இந்த போன் கொண்டுள்ளது.

பின்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் மாட்யூலை கொண்டுள்ளது. ஹெடிஆர் அமைப்புகள், ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் போன்ற பல ஸ்மார்ட் அமைப்புகளை இந்த போன் கொண்டுள்ளது.

Advertisement

இந்த போனில் 8ஜிபி சேமிப்பு வசதி மட்டுமே உள்ள நிலையில் சியோமி நிறுவனம் சார்பில் 128 ஜிபி வரையுள்ள எஸ்டி கார்டு பொருத்தும் வசதி இடம் பெற்றுள்ளது. 137 கிராம் மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மைக்ரோபோன்கள் போனில் இருக்கும் வீண் சத்தங்களை குறைக்கும் சியோமி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  2. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  3. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  4. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  5. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  6. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
  7. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  8. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  9. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  10. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.