இந்தியாவில் Redmi Go-விந் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ரெட்மி இந்தியா தனது சமூக ஊடக சேனல்கள் மூலம் அறிவித்துள்ளது. Android Go-வை அடிப்படையாகக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ. 4,499-யுடன் கடந்த ஆண்டு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரெட்மி இந்தியா கணக்கு மூலம் ட்விட்டரில் அறிவிக்கப்பட்ட சமீபத்திய திருத்தத்துடன், இந்தியாவில் Redmi Go-வின் 8GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ. 4,499-யில் இருந்து ரூ. 4,299-யாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் 16GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையும் ரூ. 4,799-யில் இருந்து ரூ. 4,499-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு தற்போது Amazon மற்றும் Mi.com மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் பிரதிபலிக்கிறது.
நினைவுகூர, Redmi Go கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஒரே 8GB ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த போன், மே மாதத்தில் 16GB ஸ்டோரேஜ் ஆப்ஷனை சேர்த்தது.
டூயல்-சிம் (நானோ) Redmi Go, Android 8.1 Oreo (Go edition)-ல் இயங்குகிறது. இது 5-inch HD (720x1280 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 1GB RAM மற்றும் Adreno 308 GPUudan உடன் quad-core Qualcomm Snapdragon 425 SoC-ஐக் கொண்டுள்ளது. இதில், f/2.0 lens மற்றும் LED flash உடன் ஒரே 8-megapixel ரியர் கேமரா சென்சார் உள்ளது. செல்ஃபிகளுக்கு, இந்த போனின் முன்புறத்தில், f/2.2 lens உடன் 5-megapixel செல்ஃபி கேமரா உள்ளது.
Redmi Go, 8GB மற்றும் 16GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. இதனை, microSD card வழியாக (128GB வரை) பிரத்தேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம். இதில் Google Photos-ல் அளவற்ற ஸ்டோரேஜும் உள்ளது. மேலும், போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும்.
Redmi Go, 10 நாட்கள் நீடிக்கக்கூடிய 3,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் 140.4x70.1x8.35mm அளவீட்டையும், 137 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்