சியோமியின் இந்த புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு வரும் மார்ச் 19 இந்தியாவில் வெளியாக உள்ளது.
ஸ்னாப்டிராகன் 425 பிராசஸரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் முதல் அண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் தயாரிப்பான ரெட்மி கோ, பிலிப்பைன்ஸில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ரெட்மி கோ தயாரிப்பை இந்தியாவில் வெளியிட சியோமி நிறுவனம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, ரெட்மி கோ தயாரிப்பு இந்தியாவில் வரும் மார்ச் 19 ஆம் தேதி டெல்லியில் நடக்கும் ஒரு விழாவில் அறிமுகபடுத்தப்படலாம் எனப்படுகிறது. சுமார் 12 மணிக்கு அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன், ஆரம்ப நிலை போனின் வசதிகை மட்டுமே பெற்றிருக்கும்.
ஸ்னாப்டிராகன் 425 SoC, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டுள்ளது. இந்த புதிய போனின் அறிவிப்பை டிவிட்டரில் பதிவு செய்த சியோமியின் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின், ரெட்மி கோ ஒரு ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் என்றும் இதன் மூலம் பலரும் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வாய்பைப் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Mi.com தளத்தில் இது குறித்து பல டீசர்கள் வெளியாகியுள்ள நிலையில் போனின் பல முக்கிய அம்சங்களை கொண்டு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ரெட்மி கோ விலை:
கடந்த ஜனவரி மாதம் பிலிப்பைன்ஸில் முன்பதிவுக்கு வெளியான ரெட்மி கோ சுமார் ரூ.5,400 மதிப்புக்கு வெளியானது. ரெட்மி 6 ஏ இந்தியாவில் ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூ.5,000க்கு குறைவான விலையிலையே விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.
ரெட்மி கோ அமைப்புகள்:
5 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் வசதி என ஸ்மார்ட்போனின் அடிப்படை வசதியை இந்த ரெட்மி கோ பெற்றுள்ளது. குவாட்-கோர் குவல்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேம் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன் 8 மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதிகளுடன் வெளியாகிறது.
மேலும் இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகிறது. சியோமி நிறுவனம் இந்த போனில் 8 மெகா பிக்சல் பின்புற கேமராவும் செல்ஃபிக்காக 5 மெகா பிக்சல் கேமராவும் இருக்கும் என்றுள்ளது.
கேமரா வசதிகளான ஹெச்டிஆர் மோட், பர்ஸ்ட் மோட் மற்றும் பல முக்கிய ஃபில்டர்கள் இந்த போனில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியுள்ளதால் 128 ஜிபி வரை சேமிப்பு வசியை அதிகரித்துக் கொள்ளலாம்.
ப்ளூடூத் 4.1 கனெக்டிவிட்டி மற்றும் 3,000mAh பேட்டரி வசதியை இந்த போன் கொண்டுள்ள நிலையில், ஆன்லைன் எக்ஸ்குளுசிவ் போனாக இருக்குமாக என்கின்ற அறிவுப்பு இன்னும் வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series Price in India, Design and Launch Timeline Leaked: Expected Specifications, Features