Photo Credit: Weibo
சியோமி நிறுவனம் தனது துணை நிறுவனமான ரெட்மீ நிறுவனத்தின் பெயரில் தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிடப் போவதாகவும், சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்தும் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய தகவல் வெளியாகிய வண்ணமே இருந்தது.
மேலும், அந்த நிறுவனம் ஒன்று அல்ல, இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த ஸ்மார்ட்போன்களை சீனாவில் முதலில் அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்த ஸ்மார்ட்போனிற்கான அறிவிப்பை மே 13 அன்று அந்த நிறுவனம் வெளியிட்டது.
இதனை உறுதி செய்யும் வகையில், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், புதிய ஸ்மார்ட்போனுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ரெட்மீ K20 என்ற பெயரை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ரெட்மீ K20-ல் 'K' என்பது "கில்லர்" என்பதை குறிக்கிறது என கூறியிருக்கிறார் வெய்பிங்.
தொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வால், இது குறித்த தகவலை முன்னதாகவே வெளியிட்டிருந்தார். அவர் கூறியதன்படி K20 மற்றும் K20 Pro என இரண்டு ஸ்மார்ட்போன்களை ரெட்மீ நிறுவனம் வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் இந்த K20-ன் Pro வகை குறித்து எந்த ஒரு தகவலையும் அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
முன்னதாக, வெய்பிங், தனது வெய்போ சமுக வலைதளப் பக்கத்தில் ஒரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தார். அந்த வாக்கெடுப்பில், ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி, இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள் என K20, P20, T20, மற்றும் X20 என நான்கு பதில்களையும் அளித்திருந்தார். அதனை அடுத்து ரெட்மீ நிறுவனம் மற்றும் லூ வெய்பிங் ஆகியோர் தமது வெய்போ சமுக வலைதள பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வமான பெயரை அறிவித்துள்ளனர்.
ரெட்மீ நிறுவனம் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது, அதிக வதந்திகளை கிளப்பிய ரெட்மீ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ரெட்மீ K20 என பதிவிட்டிருந்தது. மேலும் வெய்பிங் தனது பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது, ரெட்மீயின் அடுத்த போன்கள் K-தொடரில் வெளியாகும், மேலும் இந்த 'K'-விற்கு "கில்லர்" என்று பொருள், என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி ரெட்மீ நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போன்களை K20 மற்றும் K20 Pro என இரண்டு வகைகளில் வெளியிடப்போகிறது. மேலும், அந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மேலும், மொத்தமாக மூன்று பின்புற கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் கேமராவும், 8 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்கள் இருக்கும்.
இவற்றில் ஒன்று வைட் ஆங்கிள் படங்களை எடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். சீனாவில் வெளியாகவுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில், ஒன்று இந்தியாவில் போகோ F2 என்ற பெயரில் வெளியாகலாம் பொன்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
முன்னதாக இந்த நிறுவனத்தால் வெளியிடவுள்ள ஸ்மார்ட்போன் பற்றி பொது மேலாளர் லூ வெய்பிங் வெளியிட்டிருந்த ஒரு டீசரின் வாயிலாக, இந்த போன் திரையிலேயே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் 2 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி,பாப்-அப் செல்பி கேமரா கொண்டிருக்கும் போன்ற தகவல்களை உறுதி செய்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்