Photo Credit: Qualcomm
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Redmi A4 5G செல்போன் பற்றி தான்.
Redmi A4 5G செல்போன் இந்தியாவில் அக்டோபர் 16 அன்று இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2024 விழாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 4s Gen 2 சிப்செட் கொண்ட செல்போனாக இருக்கிறது. இந்த செல்போனின் வடிவமைப்பு மற்றும் அதன் சிப்செட் விவரங்களைத் தவிர Redmi நிறுவனம் வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த செல்போன் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Smartprix அறிக்கையின்படி Redmi A4 5G செல்போன் 4GB ரேம் 128GB மெமரி மாடல் 8,499 ரூபாய் விலையில் ஆரம்பம் ஆகிறது. இந்த விலையில் வங்கி மற்றும் பிற சலுகைகள் கிடைக்கிறது. அறிமுகமாகும் போது இதன் விலை இன்னும் கூடுதலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. IMC 2024 விழாவில் இந்த செல்போன் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெட்மி நிறுவனம் அறிவித்தது.
Redmi A4 5G செல்போன் 4nm Snapdragon 4s Gen 2 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 90Hz புதுப்பிப்பு விகிதத்துடன் கூடிய 6.7 இன்ச் HD+ IPS LCD திரையை கொண்டிருக்கும். 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரையில் Redmi A4 5G செல்போனில் f/1.8 aperture மற்றும் 8-megapixel செல்ஃபி ஷூட்டர் கேமரா இருக்கிறது. 50-மெகாபிக்சல் முதன்மை பின்பக்க கேமரா சென்சார் உடன் வருகிறது. இது ஹைப்பர்ஓஎஸ் 1.0 ஸ்கின் மூலம் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, ஃபோனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். USB Type-C போர்ட் இருக்கிறது.
Redmi A4 5G மாடலை போலவே முன்பு வெளியான Redmi A3 4G செல்போன் 3GB ரேம் 64GB மெமரி மாடல் இந்தியாவில் 7,299 ரூபாய் விலையில் அறிமுகமானது. இது MediaTek Helio G36 SoC சிப்செட் கொண்டிருந்தது. 10W சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,000mAh பேட்டரி பெற்றிருந்தது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.71 இன்ச் HD+ திரையை கொண்டிருந்தது. 8 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க செல்பி கேமரா இருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்