64ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 9,999 ரூபாய் என்றும், 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை 11,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதில் 5,020mAh கொண்ட பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ G80 SoC பிராசசர் வழங்கப்பட்டுள்ளன.
ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9 சீரிஸின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ரெட்மி 9 ப்ரைம் என்ற பெயரில் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் வருகிறது. இதில் 5,020mAh கொண்ட பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ G80 SoC பிராசசர் வழங்கப்பட்டுள்ளன.
மொத்தம் 2 விதமான வேரியன்டுகளில் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் வந்துள்ளன. 64ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 9,999 ரூபாய் என்றும், 128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 11,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஸ்பேஸ் ப்ளூ, மின்ட் கிரீன், மேட் பிளாக், சன்ரைஸ் ஃபளவர் ஆகிய கலர்களில் கிடைக்கின்றன.
இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 6) முதல் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. முதற்கட்டமாக நாளை காலை 10 மணியளவில் ஃபிளாஷ் சேல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் mi.com, அமேசான் மி ஹோம் ஸ்டோர்ஸ், மி ஸ்டூடியோஸ் ஆகிய தளங்களில் விற்பனைக்கு வருகின்றன.
சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
பாதுகாப்பு அம்சம்: கார்னிங் கொரிலா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
பிராசசர்: ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 SoC
கேமரா:
பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 13MP பிரைமரி கேமரா, 8MP வைட் ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ சூட்டர், 2MP டெப்த் கேமரா ஆகியவை உள்ளன.
இதே போல் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
128ஜிபி இன்பில்டு மெமரி, 512ஜிபி வரையிலான எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி வோல்ட், வைஃபை, IR பிளாஸ்டர், USB டைப் சி போர்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார், 5,020 mAh சக்தி கொண்ட பேட்டரி, 18W வரையிலான சார்ஜிங் ஆகியவை உள்ளன.
Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped