ஷாவ்மி இந்தோனேசியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகபடுத்தியுள்ளது - Redmi 8A Pro. இந்த போன் Redmi 8A Dual-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.ரெட்மி 8 ஏ புரோ மூன்று கலர் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு ரேம் வேரியண்டுகளில் வருகிறது.
ரெட்மி 8 ஏ புரோவின் 2 ஜிபி + 32 ஜிபி வேரியண்டின் விலை (இந்தோனேசியா) ஐடிஆர் 1,549,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,100)-யாகவும், 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்டின் விலை ஐடிஆர் 1,649,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,600)-யாகவும் உள்ளது. இந்த போன் மிட்நைட் கிரே, சீ ப்ளூ மற்றும் ஸ்கை வைட் ஆகிய மூன்று கலர் வேரியண்டுகளில் விற்பனை செய்யப்படும்.
ரெட்மி 8 ஏ ப்ரோவில் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் இருக்கும். இந்த போன், MIUI 11 உடன் Android 9-ல் இயக்கும். ரெட்மி 8 ஏ புரோ 6.22 இன்ச் (720x1,520 பிக்சல்கள்) எச்டி + டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் வேரியண்டை பொறுத்து, 2 ஜிபி அல்லது 3 ஜிபி LPDDR3 ரேம் வரும்.
ரெட்மி 8 ஏ புரோ இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஒன்று ஷூட்டர் 13 மெகாபிக்சல் கேமரா, இரண்டாவது 2 மெகாபிக்சல் ஷூட்டர். முன்புறத்தில், 8 மெகாபிக்சல் சென்சார், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சில் உள்ளது.
ரெட்மி 8 ஏ புரோ 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. ரெட்மி போன்களில் இருக்கும் மற்ற அம்சங்களும் இதில் இருக்கும். போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. இந்த போன் 156.48x75.41x9.4 மிமீ அளவு மற்றும் 188 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்