Photo Credit: Twitter/ Redmi India
ரெட்மி (Redmi) 8A வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இது குறித்த தகவலை ரெட்மி இந்தியா, ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. ரெட்மியின் A வகை போன்களில், இந்த போனும் சேரும். இந்த ஸ்மார்ட் போனில் வாட்டர்-ட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி 7A போனுடைய அப்டேட்டட் வெர்ஷனாக 8A இருக்கும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம், 7A வெளியானது.
இன்னும் ரெட்மி 8A குறித்து சிறப்பம்சங்கள் குறித்தான தகவலை ஷாவ்மி தெரிவிக்கவில்லை என்றாலும், 5,000 எம்.ஏ.எச் பேட்டரி வசதி, எச்.டி ப்ளஸ் டிஸ்ப்ளே, டூயல் ரியர் கேமரா வசதிகள் இருக்க வாய்ப்புள்ளது.
ரெட்மி 8A விலை (எதிர்பார்க்கப்படுவது):
ரெட்மி A வகை போன்களைப் பார்க்கும் போது, 8A ஸ்மார்ட்போன், 7A-வின் அடுத்த வெர்ஷனாக தெரிகிறது. விலையைப் பொறுத்தவரை, 7A-வுடன் ஒப்பிடும்போது, ரெட்மி 8A, சுமார் 5,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 8A சிறப்பம்சங்கள் (சொல்லப்படுபவை):
இன்னும் 8A குறித்தான முழு தகவல்களை சொல்லவில்லை ஷாவ்மி. அதே நேரத்தில் ரெட்மி 8A-வில், 6.217 இன்ச் எச்.டி+ திரை, டி.எஃப்.டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, 12 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
5,000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் இந்த போன் வரும் எனப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்