Photo Credit: Twitter/ MIUI
ரெட்மி 8 அப்டேட், கேமரா மற்றும் பேட்டரி செயல்பாடுகளை மேம்படுத்தும்
ஸ்மார்ட்போனின் பேட்டரி மற்றும் கேமரா செயல்திறனை மேம்படுத்தும் முயற்சியில், ஷாவ்மி செவ்வாயன்று தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் சமீபத்திய MIUI 11 அப்டேட்டை வெளியிடத் தொடங்கியது. இந்த அப்டேட் இப்போது இந்திய பயனர்களுக்கு கிடைக்கிறது. எல்லா அப்டேட்டுகளையும் போலவே, ஷாவ்மியும் அதை தொகுப்பாக வெளியிடும். நிறுவனம் MIUI 11 குளோபல் ஸ்டேபிள் ROM V11.0.7.0 ரோல்அவுட்டின் செய்திகளை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது.
"எம்ஐ ரசிகர்கள், செயல்திறன் சாம்பியனை மேலும் #பேட்டரி கேமராஆக்ஷனுக்குத் தயார்படுத்தும் ஒரு அப்டேட்" என்று MIUI குழு ட்விட்டரில் அறிவித்தது.
இந்த அப்டேட்டில் பேட்டரி மற்றும் கேமரா செயல்திறன் மேம்பாடுகள் உள்ளன என்பதைக் குறிப்பிடுவதைத் தவிர, நிறுவனம் வேறு எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த அப்டேட் அளவு கூட தெரியவில்லை. நிறுவனம் கடந்த மாதம் அதே அப்டேட்டை ஒரு குறிப்பிட்ட அளவிலான நுகர்வோருக்கு வெளியிடத் தொடங்கியது, ஆனால் இப்போது அது இறுதியாக விரிவாக்கப்பட்ட ரோல் அவுட்டைத் தொடங்கியுள்ளது. உங்கள் Redmi 8-ல் நீங்கள் ஏற்கனவே அப்டேட்டை பெறவில்லை என்றால், அடுத்த சில நாட்களில் நீங்கள் அதை பெறுவீர்கள்.
உங்கள் போனில் உங்களுக்காகத் தயாரானதும் தானாகவே அறிவிப்பைப் பெறுவீர்கள். அப்டேட்டை மேனுவலாக தேட, Settings > About phone > Download அப்டேட்டுக்கு செல்லவும்.
நினைவுகூர, MIUI 11-ன் முதல் பதிப்பு கடந்த ஆண்டு Redmi Note 8-ல் வெளியிடப்பட்டது, இது டார்க் மோட், எப்போதும் டிஸ்பிளே செயல்பாடு, லாக் ஸ்கீரினில் டைனமிக் கடிகாரம் போன்ற அம்சங்களுடன் மிகச்சிறிய வடிவமைப்பைக் கொண்டதாகக் கூறப்பட்டது. MIUI அப்டேட் அதன் ஆரம்ப வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, 2019 நவம்பரில் ரெட்மி 8-ல் வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், Xiaomi ஒரு புதிய அம்சத்தை 'ஆப் பிஹேவியர் ரெக்கார்ட்ஸ்' என்று சோதித்து வருவதாக கூறப்படுகிறது, இது ஒரு செயலி சந்தேகத்திற்கிடமான செயல்களைச் செய்யும்போது அறிவிப்பை அனுப்பும். இருப்பினும், இந்த அம்சம் சோதனைக் கட்டத்தில் உள்ளது. மேலும், இது MIUI 11-ல் வெளிவருவமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்