Redmi 8A மற்றும் Redmi 8-க்கான MIUI 11 நிலையான அப்டேட் நவம்பர் 13 முதல் வெளியிடப்படும் என்று ஜியோமி அக்டோபரில் மீண்டும் அறிவித்தது. பயனர்களுக்கு மகிழ்ச்சியான ஆச்சரியமாகத் தெரிந்த நிலையில், Redmi 8 மற்றும் Redmi 8A-க்கான MIUI 11 நிலையான அப்டேட் இந்திய திட்டமிடலுக்கு முன்னதாகவே ஜியோமி தொடங்கியுள்ளது. இப்போது, ஒரு டன் யுஐ மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இந்த அப்டேட் அக்டோபர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் (October Android security patch) கொண்டு வருகிறது. இருப்பினும், Redmi 8 மற்றும் Redmi 8A-க்கான சமீபத்திய MIUI 11 stable அப்டேட் இன்னும் Android Pie-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால், Android 10 அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதிகாரப்பூர்வ Mi சமூக மன்றத்தில் Redmi 8 மற்றும் Redmi 8A பயனர்களிடமிருந்து பல பதிவுகளை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். இந்தியாவில் MIUI 11 நிலையான அப்டேட்களின் வருகையை விவரிக்கிறது. Redmi 8A-க்கான MIUI 11 அப்டேட் உருவாக்க எண் v11.0.1.PCPINXM மற்றும் 544MB அளவு கொண்டது. அதே நேரத்தில் Redmi 8-க்கு v11.0.1.PCNINXM உருவாக்க எண் மற்றும் 600MB அளவு உள்ளது.
மாற்றங்களைப் பொறுத்தவரை, Redmi 8 மற்றும் Redmi 8A-க்கான MIUI 11 அப்டேட் ஒரு மாற்றியமைக்கப்பட்ட UI-ஐ அறிமுகப்படுத்துகிறது. இது நிறைய இரைச்சல்களை நீக்குகிறது. touch controls மேம்படுத்துகிறது. மேலும், அலாரம் ரிங்டோன்களுக்கான இயற்கையின் அம்சத்தின் ஒலிகளையும், உள்வரும் அறிவிப்புகளுக்கு டைனமிக் இசை அம்சத்தையும் சேர்க்கிறது. இது தொலைபேசிகளுக்கு இடையில் விரைவான கோப்பு பகிர்வுக்கு (file sharing ) உள்ளக Mi Share கோப்பு பரிமாற்ற அம்சத்தையும் சேர்க்கிறது. ஒரு ஆவண முன்னோட்ட அம்சமும் உள்ளது. இதன் பெயர் தெளிவாகக் குறிப்பிடுவது போல, ஒரு ஆவணத்தின் முன்னோட்டத்தைத் திறப்பதற்கு முன்பு பயனர்களைப் பார்க்க அனுமதிக்கிறது.
Redmi 8 மற்றும் Redmi 8A-க்கான MIUI 11 நிலையான அப்டேட் விரைவான அச்சு கருவியை அறிமுகப்படுத்துகிறது. இது பயனர்கள் ஒரு பிரத்யேக உள் அல்லது மூன்றாம் தரப்பு அம்சத்தை இன்ஸ்டால் செய்யாமல் ஆவணங்களை அச்சிட அனுமதிக்கிறது. மென்பொருள் அப்டேட் கேமிங்கின் போது செயல்திறன் முடுக்கம் செய்வதற்கான விளையாட்டு டர்போ அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. messaging apps விரைவான பதில் அம்சம் மற்றும் திறமையான Notes app ஆகியவற்றைத் தவிர, நீங்கள் ஒரு Redmi 8 மற்றும் Redmi 8A வைத்திருந்தால், இந்த பாதையைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தொலைபேசியில் MIUI 11 அப்டேட் கிடைப்பதை சரிபார்க்கலாம்: Settings > About phone > System update.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்