சியோமி தனது அடுத்த முக்கிய தயாரிப்பான ரெட்மி 7 போனை சீனாவில் இன்று வெளியாகும் ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் அறிமுகம் செய்யவுள்ளது. இதுவரை ரெட்மி 7 பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில் இன்று நடக்கும் விழாவில் முழுமையான தகவல்களுடன் அறிமுகமாகிறது.
சீனாவில் இந்த தயாரிப்பு வெளியாகும் நிலையில், இந்த போன் சுமார் ரூ.9,300 வரை விலையில் சந்தைக்கு வரலாம் எனப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான லீ ஜூன், இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.26 இஞ்ச் ஹெச்டி திரையைக் கொண்டுள்ளதாகவும் ஆக்டா-கோர் பிராசஸரை கொண்டு செயல்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் 2, 3 மற்றும் 4 ஜிபி ரேம் வரை இந்த போன் கொண்டுள்ளதாகவும் சேமிப்பு வசதியைப் பொறுத்தவரை இந்த போனில் 16, 32 மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 3,900mAh பேட்டரி பவர் மற்றும் ஸ்னாப்டாரகன் 632 SoC இடம் பெற வாய்ப்புள்ளது.
மேலும் இதுவரை வெளியான குறிப்புகளைப் பொறுத்தவரை இந்த போனில் இரண்டு பின்புற கேமராக்கள் இடம் பெறும் எனவும் அவைகள் 12 மற்றும் 8 மெகா பிக்சல் சென்சார்களாக கொண்டிருக்கவும் அதிக வாய்புள்ளது. இந்த போன் நீலம், கறுப்பு, பச்சை, சாம்பல், பிங்க், பர்பிள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகலாம்.
முன்புறம் இருக்கும் செல்ஃபி கேமராவைப் பற்றிய தகவல் ஏதும் இன்னும் வெளியாக நிலையில், இந்த தயாரிப்பு 180 கிராம் இடை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்