முதல் தொகுதி சாதனங்களுக்கு MIUI 11-ஐ வெளியிட்ட பிறகு, ஜியோமி இரண்டாவது தொகுதிக்கு அதாவது பழைய சாதனங்களுக்கு முக்கிய அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. Redmi Note 5 Pro சில நாட்களுக்கு முன்பு அப்டேட்டைப் பெற்றது, இப்போது Redmi 6 Pro மற்றும் Redmi Y2 ஆகியவை பட்டியலில் சேர்ந்துள்ளன. இந்த இரண்டு தொலைபேசிகளையும் கொண்ட பயனர்கள் மன்றங்களில் ஸ்கிரீன் ஷாட்களை பதிவிடுகிறார்கள். இது அப்டேட்டின் வருகையை உறுதிப்படுத்துகிறது. அப்டேட் ரோல்அவுட் இப்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான பிழைகள் எதுவும் காணப்படாத பின்னர் ஒரு பரந்த வெளியீடு தொடங்கும்.
இந்தியாவில் Redmi 6 Pro மற்றும் Redmi Y2 பயனர்கள் MIUI 11 மன்றங்களில் MIUI 11 நிலையான அப்டேட்டைப் பெற்றுள்ளதாக பதிவிடுகின்றனர். Redmi 6 Pro அப்டேடின் பதிப்பு எண் MIUI 11.0.3.0.PDMMIXM மற்றும் Redmi Y2 அப்டேடின் பதிப்பு எண் MIUI 11.0.1.0.PEFMIXM உடன் வருகிறது. screenshots அடிப்படையில், Redmi 6 Pro-வின் அப்டேட்டின் அளவு 534MB மற்றும் Redmi Y2-வின் அப்டேட்டின் அளவு 1.5GB ஆக உள்ளது. ஜியோமியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை அல்லது இதுவரை எந்த பதிவிறக்க இணைப்பும் கிடைக்கவில்லை, இது இப்போதைக்கு உலகளாவிய பீட்டா நிலையான வெளியீட்டாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. ஆரம்ப சோதனை முடிந்தவுடன் ஒரு பரந்த ரோல்அவுட் பின்பற்றப்படும்.
Settings-ல், manual-ஆக MIUI 11 அப்டேட்டை நீங்கள் சரிபார்க்கலாம். மேலும், அப்டேட்டைப் பெறவில்லை என்றால், நீங்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்டேட்டைப் பெற்றிருந்தால், அதை ஒரு நல்ல வைஃபை இணைப்பின் கீழ் பதிவிறக்கம் செய்து, தொலைபேசி சார்ஜில் இருக்கும் போது இன்ஸ்டால் செய்யவும். இந்த அப்டேட் அக்டோபர் பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது. MIUI 11 ஒரு புதிய minimalistic design, புதிய dynamic sound effects, புதிய Mi File Manager app, Steps Tracker, Wallpaper Carousel மற்றும் Floating Calculator போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது.
இரண்டாம் கட்ட அப்டேட் நவம்பர் 4-12-ஆம் தேதிக்கு இடையில் Redmi 6, Redmi 6A, Redmi Note 5, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi 4, Mi Mix 2 மற்றும் Mi Max 2-ஐ மேம்படுத்தும். Redmi K20 Pro இரண்டாம் தொகுதியின் ஒரு பகுதியாகும். ஆனால், ஏற்பனவே MIUI அப்டேட்டைப் பெறத் தொடங்கியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்