Live Now

Helio G85 செயலியுடன் வருகிறது ரெட்மி 10 எக்ஸ்! 

விளம்பரம்
Kathiravan Gunasekaran, மேம்படுத்தப்பட்டது: 23 ஏப்ரல் 2020 15:00 IST
ஹைலைட்ஸ்
  • ரெட்மி 10 எக்ஸ் சீனா டெலிகாமில் பட்டியலிடப்பட்டுள்ளது
  • இது மீடியா டெக் ஹீலியோ ஜி 85 செயலியுடன் வரும் என்று கூறப்படுகிறது
  • போனின் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு இருக்கலாம்

ரெட்மி 10 எக்ஸ் புகைப்படங்கள், போனில், ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளதை காட்டுகிறது

Photo Credit: China Telecom

M2003J15SC மாதிரி எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போன் சீன சான்றிதழ் தளமான TENAA-வின் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டது. இந்த போன் ரெட்மி 10 எக்ஸ் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா டெலிகாமின் சமீபத்திய பட்டியல், ஸ்மார்ட்போனின் சில புதிய அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. Helio G85 செயலியுடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கலாம். இதன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. அவை இந்த ரெட்மி போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
 

ரெட்மி 10 எக்ஸ் விலை (எதிர்பார்க்கப்படுபவை)

சீனா டெலிகாமின் பட்டியலின்படி, Redmi 10X-ன் விலை சீனாவில் சிஎன்ஒய் 1,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,000)-யில் இருந்து தொடங்கும். இந்த போன் ஸ்கை ப்ளூ, பைன் மார்னிங் கிரீன் மற்றும் ஐஸ் ஃபாக் வைட் வண்ணங்களில் கிடைக்கும். இந்த போன் ஏப்ரல் 27 வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த நேரத்தில், போனின் விற்பனை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
 

ரெட்மி 10 எக்ஸ் விவரங்கள் (எதிர்பார்க்கப்படுபவை)

இந்த போனில் டூயல்-சிம் ஸ்லாட் உள்ளது. இது மெல்லிய பெசல்களுடன் 6.53 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் வரும். போனில் MediaTek Helio G85 செயலி இருக்கும். அதனுடன் 6 ஜிபி ரேம் வழங்கப்படும். புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட MIUI 11 ஓஎஸ் இருக்கும்.

ரெட்மி 10 எக்ஸ்ஸின் பின்புறத்தில் நான்கு கேமராக்களை காணலாம். இந்த தொகுதியில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் இருக்கும். செல்பிக்கு, ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் பற்றிய தகவல்கள் உள்ளன. ரெட்மி 10 எக்ஸ்ஸில் 5020 எம்ஏஎச் பேட்டரி வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 162.38 x 77.2 x 8.95 மிமீ அளவு மற்றும் 205 கிராம் எடையுள்ளவை என்று பட்டியல் கூறுகிறது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi 10X, Xiaomi, China Telecom
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 30,000 ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் Alcatel V3 Ultra
  2. Lava Shark 5G செம்ம! 10,000 ரூபாய்க்கு கீழே விற்பனைக்கு வரும் செல்போன்
  3. iQOO Neo 10 Pro+ : மே 20 லாஞ்சுக்கு முன்னாடி ஸ்பெக்ஸ் வெளியாகிடுச்சு
  4. Realme GT 7 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9400 in SoC-ஐக் கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
  5. Samsung Galaxy S25 Edge இந்தியாவில் விலை அறிவிப்பு, முன்பதிவு தொடங்கியது
  6. Motorola Razr 60 Ultra: இந்தியாவில் அறிமுகமான புதிய மடிக்கும் மொபைல்
  7. Vivo V50 Elite Edition வட்ட வடிவ கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்
  8. Airtel Black Rs. 399 திட்டம்: IPTV உடன் புதிய புரட்சி செய்ய காத்திருக்கும் அறிவிப்பு
  9. Alcatel V3 Ultra செல்போன் பட்ஜெட் பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்ய அப்டேட்
  10. Moto G86 Power 5G பற்றி ஆன்லைனில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.