Realme XT ஸ்மார்ட்போன் வெற்றிகரமாக இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவில் அறிமுகமான முதல் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த Realme XT பெற்றுள்ளது. முன்னதாக, சீனாவில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சாருடன் Redmi Note 8 Pro அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், இந்தியாவில் அந்த ஸ்மார்ட்போன் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை. 64 மெகாபிக்சல் கேமராவுடன், நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்ட Realme XT ஸ்மார்ட்போன், 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னேப்டிராகன் 712 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 4,000mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்த அறிமுக நிகழ்வில், தன் புதிய Realme XT 730G ஸ்மார்ட்போன் மட்டுமின்றி, ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன் மற்றும் பவர் பேன்க் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், ப்ராசஸர் மற்றும் அதிவேக ஜார்ஜிங் திறனை தவிர்த்து Realme XT-யை போன்றே உள்ளது. Realme XT 730G ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 730G எஸ்.ஓ.சி ப்ராசஸருடன், 30W அதிவேக சார்ஜிங் திறனை கொண்டுள்ளது.
இந்தியாவில் 4GB RAM + 64GB சேமிப்பு என்ற அளவுகளுடன் அடிப்படை வகையை கொண்ட இந்த Realme XT ஸ்மார்ட்போன், 15,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 6GB RAM + 64GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 128GB சேமிப்பு என மேலும் இரண்டு வகைகள் 16,999 ரூபாய் மற்றும் 18,999 ரூபாய் என்ற விலைகளில் அறிமுகமாகியுள்ளது.இந்த ஸ்மார்ட்போன்கள் நீலம் (Pearl Blue) மற்றும் வெள்ளை (Pearl White) என இரண்டு வண்ணங்களில் கிடைக்கப்பெறும்.
இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் என இரு தளங்களிலும் செப்டம்பர் 16 அன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன், ஆப்லைன் சந்தைகளில் கிடைக்கபெறும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனை Paytm UPI மூலம் பெற்றால் 2,000 ரூபாய் கேஷ்-பேக், அதுமட்டுமின்றி 750 ரூபாய் மதிப்புள்ள Paytm முதல் மெம்பர்ஷிப்பும் இலவசம். மேலும் இந்த ஸ்மார்ட்போனை பெறும் முதல் 64,000 பேருக்கு 6 மாதங்களுக்கான இலவச திரை மாற்றும் இலவசம் என அறிவித்துள்ளது. இவை மட்டுமின்றி ரியல்மி தளத்தில் 20,000 ரூபாய் வரியடிலான சலுகைகளையும் வழங்கவுள்ளது.
Realme XT ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸர், 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்துடன் 6.4-இன்ச் சூப்பர் AMOLED திரையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முன் மற்றும் பின் என இரண்டு புறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்டிராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை ஆண்ட்ராய்ட் 9 பையை (Android 9 Pie) மையப்படுத்தி ColorOS 6 அமைப்பை கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொருத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முக்கியமாக, 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என அமைந்துள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கூடவே, 4,000mAh பேட்டரி, 20W VOOC 3.0 விரைவு சார்ஜிங் வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டைப்-C சார்ஜர் போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்