போனின் hole-punch வடிவமைப்பு வரவிருக்கும் Redmi K30 5G போன்றது.
Realme X50, NSA மற்றும் SA ஆகிய இரண்டு 5G நெட்வொர்க் ஆதரவை வழங்கும்
ரியல்மி இந்த ஆண்டு தொடக்கத்தில் 5G போன்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. மேலும் 5G-ரெடி போன்களை சந்தைக்கு கொண்டு வரும் முதல் பிராண்டுகளில் இதுவும் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியது. ரியல்மி இப்போது அதன் முதல் 5G தொலைபேசியின் பெயரை வெளியிட்டுள்ளது - Realme X50 - விரைவில் அறிமுகப்படுத்தப்படும். Realme X50-யானது வரவிருக்கும் Redmi K30 5G போலவே dual-mode NSA மற்றும் SA 5G நெட்வொர்க்கிற்கும் ஆதரவை வழங்கும். மேலும், இதில் pill-shaped hole-punch காணப்படுவதோடு, இரட்டை செல்ஃபி கேமராக்களைக் கொண்டிருக்கும்.
ரியல்மியின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி, Xu Qi Chase, வெய்போ பதிவில், Realme X50 நிறுவனத்தின் முதல் 5G போனாக இருக்கும் என்று தெரிவித்தார். வரவிருக்கும் ரியல்மி போன் 5G (Standalone - SA) மற்றும் (Non-Standalone - NSA) நெட்வொர்க்குகளுக்கு ஆதரவை வழங்கும் அல்லது dual-mode 5G இணைப்பு ஆதரவுடன் எளிமையாகச் சொல்லும். ஆனால், 5G ஆதரவை வழங்க Realme X50-யானது MediaTek SoC அல்லது Qualcomm SoC-ஐ சார்ந்திருக்குமா என்பதை ரியல்மி நிர்வாகி அல்லது நிறுவனமே வெளிப்படுத்தவில்லை.
செப்டம்பர் மாதத்தில், Qualcomm's 5G-ரெடி Snapdragon 700-சீரிஸ் பிராசசரால் இயக்கப்படும் 5G போன்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ரியல்மி அறிவித்தது. மேற்கூறிய சிப்செட் இன்னும் அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை என்றாலும், கசிவு அரங்கைச் சுற்றி வரும் வதந்திகள், 5G ஆதரவை வழங்கும் first non-flagship-ன் Qualcomm பிராசசர்களில் ஒன்றாக Snapdragon 735 SoC, இருக்கலாம் என்று கூறுகின்றன. ஜியோமியின் Redmi K30 5G டிசம்பரில் அறிமுகம் செய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டாலும், Realme X50 எப்போது அறிமுகமாகி இந்தியாவுக்கு வரும் என்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை. இருப்பினும், ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் 5G போன்கள் 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். எனவே, இந்த மாத இறுதியில் அல்லது டிசம்பரில் ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கிறோம்.
Chase-ல் வெய்போ பகிர்ந்த சுவரொட்டி Realme X50-ன் நிழலையும் காட்டுகிறது. இரட்டை செல்பி கேமராக்களைக் கொண்டிருக்கும் டிஸ்பிளேவில் pill-shaped hole-punch விளையாடுவதை போன் சித்தரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. Realme X50-யில் உள்ள hole-punch டிஸ்பிளே மேல் இடது மூலையில் உள்ளது. ஒப்பிடுகையில், ஜியோமியின் வரவிருக்கும் Redmi K30 5G dual hole-punch வடிவமைப்பையும் பேக் செய்யும். ஆனால், செல்ஃபி சென்சார்கள் டிஸ்பிளேவின் மேல் வலது மூலையில் அமைந்துள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?