இரண்டு நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Realme X50 5G...!

இரண்டு நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Realme X50 5G...!

Photo Credit: Weibo

Realme X50 5G-யின் வெளியீட்டு தேதி ஜனவரி 7 என தெரியவந்துள்ளது

ஹைலைட்ஸ்
  • Realme X50 5G கேமரா மாதிரி விவரம் மற்றும் வண்ணத்தைக் காட்டுகிறது
  • ஸ்கிரீன்ஷாட் டீஸர் பேட்டரி இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று கூறுகிறது
  • சீனாவில் X50 5G-யுடன் Realme Buds Air வெளியீடும் கிண்டல் செய்யப்படுகிறது
விளம்பரம்

Realme X50 5G வெளியீட்டு தேதிக்கு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ​​நிறுவனம் ஒவ்வொரு நாளும் புதிய அம்சங்களை கிண்டல் செய்கிறது. இப்போது, ​​போனின் புதிய ரெண்டர் side-fingerprint சென்சாரைக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 64 மெகாபிக்சல் குவாட் கேமராவை காண்பிக்க கேமரா மாதிரிகளை வெளியிடப்பட்டுள்ளன. புதிய டீஸர்கள், ஒரு நிலப்பரப்பு புகைப்படத்தில் அதிக composition உடன் எடுக்க, இந்த போன் ஒரு wide-angle கேமராவுடன் வரும் என்றும் பரிந்துரைக்கின்றன. சீனாவில் Realme Buds Air-ன் வருகையை இந்நிறுவனம் கிண்டல் செய்துள்ளது மேலும், ஸ்கிரீன்ஷாட் டீஸர், Realme X50 5G-யின் பேட்டரி இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று அறிவுறுத்துகிறது.

டீஸர்களில் தொடங்கி, ரியல்மி தயாரிப்பு இயக்குனர் வாங் வீ டெரெக் (Wang Wei Derek) பகிர்ந்த புதிய Realme X50 5G ரெண்டர் போனின் வலது பக்கத்தைக் காட்டுகிறது. மேலும், அங்கு fingerprint சென்சார் காணப்பட்டது. இதன் பொருள் Realme X50 5G-யில் in-display fingerprint சென்சார் இருக்காது. ஆனால், அதற்கு பதிலாக ஒரு பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அனைத்து Realme X சீரிஸ் போன்களிலும் இதுவரை in-display fingerprint சென்சார் பொருத்தப்பட்டிருந்தது. மேலும், போனின் விலையை குறைக்க Realme X50 5G-யில் LCD டிஸ்ப்ளே பேனலை இணைக்க நிறுவனம் முடிவு செய்ததால், இந்த மாற்றமானது இருக்கிறது.

Realme X50 5G போனிலிருந்து எடுக்கப்பட்ட கேமரா மாதிரியை ரியல்மி தனது வெய்போ கணக்கில் பகிர்ந்து கொண்டது. இது போனின், புகைப்படம் எடுக்கும் திறனைக் காட்டுகிறது. ஒரு மலைப்பிரதேசத்தின் படம் பகிரப்பட்டு, விடியற்காலையிலோ அல்லது அந்தி வேளையில் எடுக்கப்பட்டிருக்கலாம், விவரம் மற்றும் வண்ண இனப்பெருக்கம் ஆகியவற்றைக் காட்டுகிறது. Realme X50 5G போனிலிருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் டெரெக் (Derek) பகிர்ந்துள்ளார். இது ஒரு நாள் பயன்பாட்டிற்குப் பிறகு பேட்டரி ஆயுளைக் காட்டுகிறது. பேட்டரி ஆயுள் 62 சதவீதமாக இருந்தது, இதிலிருந்து, போனில் இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் வழங்க முடியும் என்று நாம் யூகிக்க முடியும். போனில் பேட்டரி திறன் குறித்து இதுவரை எந்த வார்த்தையும் இல்லை.

realmex505g camera sample weibo main Realme X50 5G

Realme X50 5G-யின் 64-மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பு கிண்டல் செய்யப்படுகிறது 
Photo Credit: Weibo/ Realme

குறிப்பிட்டுள்ளபடி, நிறுவனம் Realme Buds Air-ஐயும் ஜனவரி 7-ஆம் தேதி வருவதை கிண்டல் செய்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்த இயர்பட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது அவை சீனாவிலும் கிடைக்கும். Realme X50 5G ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மேம்பட்ட VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

Realme X50 5G With Qualcomm Snapdragon 765G SoC to Launch on January 7

Realme X50 5G to Come With Enhanced VOOC 4.0 Flash Charge Fast Charging Tech, Teaser Reveals

Realme X50 5G Teased to Offer 100 Percent Coverage of Heating Sources, Include 5D Ice-Cooled Heat Dissipation System

Realme X50 Confirmed to Offer Simultaneous Dual-Channel Wi-Fi and 5G Connectivity

Realme X50 5G Tipped to Feature 64-Megapixel Quad Rear Camera Setup, 30W Fast Charging Support

Realme X50 5G to Be Powered by Snapdragon 765G SoC, Company Reveals

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »