Realme X50 5G வெளியானது! முழு விவரங்கள் உள்ளே...!

Realme X50 5G வெளியானது! முழு விவரங்கள் உள்ளே...!

Realme X50 5G, Polar White மற்றும் Glacier Blue கலர் ஆப்ஷன்களில் வருகிறது

ஹைலைட்ஸ்
  • Realme X50 5G மாஸ்டர் பதிப்பு, ஒரே 12GB + 256GB வேரியண்டில் வருகிறது
  • Realme X50 5G, dual-mode 5G ஆதரவுடன் வருகிறது
  • Realme UI-ல் இயங்கும் முதல் போன் இதுவாகும்
விளம்பரம்

ஏராளமான டீஸர்களுக்குப் பிறகு, Realme X50 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவிக்கப்பட்ட புதிய Realme UI-ஐ இயக்கும் முதல் போன் இதுவாகும்.


Realme X50 5G, Realme X50 5G Master Edition விலை:

Realme X50 5G-யின் 8GB + 128GB மாடலின் விலை CNY 2,499 (இந்திய மதிப்பில் ரூ. 25,800)-யாக உள்ளது. அதன் 12GB + 256GB மாடல் CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 30,900)-யாக விலையிடப்பட்டுள்ளது. இந்த போன் Polar White மற்றும் Glacier Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகிறது. இது ஜனவரி 9 முதல் விற்பனைக்கு வரும். மேலும், Realme தற்போது தனது இணையதளத்தில் (website) Realme X50 5G போனில் முன்பதிவு செய்து வருகிறது. Realme X50 5G Master Edition-ன் ஒற்றை 12GB + 256GB மாஸ்டர் பதிப்பில் வருகிறது. இதன் விலை  CNY 3,099 (இந்திய மதிப்பில் ரூ. 32,000) ஆகும். இது Black மற்றும் Gold finishes-ல் வருகிறது. மேலும், ரியல்மி தற்போது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் (official site) போனில் முன்பதிவு செய்து வருகிறது.

Realme X50 5G வேரியண்ட் விலை (CNY)
Realme X50 5G 8GB+128GB 2,499
Realme X50 5G 12GB+256GB 2,999
Realme X50 5G Master Edition 12GB+256GB 3,099

Realme X50 5G, Realme X50 5G Master Edition விவரக்குறிப்புகள்:

வெளியீட்டு நிகழ்வில் Realme UI மென்பொருளும் அறிவிக்கப்பட்டது. புதிய ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான மென்பொருளில் இயங்கும் முதல் போன் Realme X50 5G ஆகும். Realme X50 5G மற்றும் Realme X50 5G மாஸ்டர் பதிப்பு ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளை வழங்குகின்றன. பிந்தையது ஒற்றை 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. டூயல்-சிம் (நானோ + நானோ) Realme X50 5G, 120Hz refresh rate, 20:9 aspect ratio, 90.4 percent screen ratio மற்றும் Corning Gorilla Glass 5 protection உடன் 6.57-inch full-HD+ (100x2400 pixels) LCD hole-punch டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, Realme X50 5G, 12GB RAM உடன் இணைக்கப்பட்டு, 2.4GHz octa-core Snapdragon 765G SoC-யால் இயக்கப்படுகிறது. 256GB வரை இண்டர்னல் ஸ்டோரேஜும் வழங்கப்படுகிறது. மேலும், ஸ்டோரேஜ் விரிவாக்கத்திற்காக microSD card slot இல்லை.

realme x505gmaste edition dmain Realme X50 5gMaster Edition

Realme X50 5G Master Edition, ஒற்றை 12GB + 256GB வேரியண்டுடன் வருகிறது

Realme X50 5G கேமரா: 

கேமராக்களைப் பொறுத்தவரை, Realme X50 5G குவாட் கேமரா அமைப்பை, பின் பேனலின் மேல் இடது மூலையில் வைக்கிறது. இந்த அமைப்பில், 1/1.72-inch Samsung GW1 சென்சாருடன் f/1.8 aperture மற்றும் 78.6 degree field of view உடன் 64-megapixel பிரதான கேமரா உள்ளது. 20x hybrid zoom-ஐ வழங்கும் f/2.5 aperture உடன் இரண்டாம் நிலை 12-megapixel telephoto கேமரா உள்ளது. 119-degree ultra-wide angle lens மற்றும் f/2.25 aperture உடன் 8-megapixel மூன்றாம் நிலை கேமராவும், இறுதியாக f/2.4 aperture உடன் 2-megapixel macro கேமராவையும் கொண்டுள்ளது. முன்னால், திரையின் மேல்-இடது மூலையில் உள்ள pill-shaped cutout-ல் இரண்டு செல்ஃபி சென்சார்கள் உள்ளன  – ஒன்று f/2.0 aperture உடன் 16-megapixel கேமரா, மற்றொன்று f/2.2 aperture மற்றும் 105 degree ultra-wide angle lens உடன் 8-megapixel கேமரா ஆகும்.realme x50 5g back Realme

Realme X50 5G குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது

Realme X50 5G, 30W VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4,300mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது போனை, 30 நிமிடங்களில் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்வதாக கூறுகிறது. இணைப்பு விருப்பங்களில் USB Type-C port, Wi-Fi 802.11ac, Bluetooth 5, dual-mode 5G (SA/ NSA), NFC, dual-frequency GPS மற்றும் பல. இந்த போன் side-mounted fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது. இது  163.8x75.8x8.9mm அளவீடையும், 202 கிராம் எடையையும் கொண்டதாகும்.

  • KEY SPECS
  • NEWS
Display 6.57-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 16-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »