Realme X50 5G வெளியீட்டு தேதி நாளை அறிவிப்பு! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 23 டிசம்பர் 2019 16:35 IST
ஹைலைட்ஸ்
  • Realme X50 5G வெளியீட்டு தேதி வெய்போவில் கிண்டல் செய்யப்பட்டுள்ளது
  • Realme ஏற்கனவே புதிய போனின் முக்கிய அம்சங்களை கிண்டல் செய்துள்ளது
  • Realme X50 5G ஆரம்பத்தில் ஜனவரி 25-க்கு முன்பு அறிமுகமாகலாம்

Realme X50 5G டூயல் செஃபி கேமராவுடன் வரும்

Photo Credit: Weibo/ Realme

Realme X50 5G வெளியீட்டு தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது என்று, சீன நிறுவனம் வெய்போவில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி வழங்கும் முதல் 5G ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டீஸர்கள் மூலம், Realme X50 5G இரட்டை சேனல் வைஃபை மற்றும் 5G இணைப்பு ஆதரவுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், Qualcomm Snapdragon 765G SoC ஆகியவை அடங்கும். ரியல்மி போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பும் இருக்கும். Realme X50 5G, ஆரம்பத்தில் ஜனவரி 25-ஆம் தேதி Chinese Spring Festival-ன் சிறிது காலத்திற்கு முன்பே தொடங்கப்படும் என்று ஊகிக்கப்பட்டது. 

Realme X50 5G வெளியீடு ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்று பரிந்துரைக்கும் டீஸர் படத்தை வெய்போ பதிவு கொண்டுள்ளது. இது புதிய Realme போனின் வெளியீட்டு தேதியாக ஜனவரி 5-ஐ பரிந்துரைத்த ஒரு சுவரொட்டி மூலம், Realme CMO Xu Qi Chase வழங்கிய சமீபத்திய குறிப்பை இது உறுதிப்படுத்துகிறது.

Realme X50 5G வெளியீட்டு தேதி கிண்டல் செய்யப்பட்டது
Photo Credit: Weibo/ Realme

இது ஜனவரி 5 இல்லையென்றால், Realme X50 5G வெளியீடு ஜனவரி 15 ஆம் தேதி திட்டமிடப்படலாம். ஏனெனில், டீஸர் படம் எண் ஐந்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறது. ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை வருகிறது. அதே சமயம் ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை. எனவே ரியல்மி முந்தையதைத் தேர்ந்தெடுப்பதில் அர்த்தமுள்ளது. மேலும், சீன நிறுவனங்கள் தங்களது புதிய அறிமுகங்களை செவ்வாய்க்கிழமை அடிக்கடி நடத்துகின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

இது ஜனவரி 5 அல்லது ஜனவரி 15 என்பது முக்கியமல்ல, இறுதியாக நாளை அதிகாரப்பூர்வ விவரங்களைப் பெறுவோம்.

முந்தைய டீஸர்கள் Realme X50 5G-யின் முக்கிய சிறப்பம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளன. ஸ்மார்ட்போன் மேம்பட்ட VOOC 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கிண்டல் செய்யப்படுகிறது, இது ஐந்து சிப் பாதுகாப்புடன் கிடைக்கும். வெப்பமூட்டும் மூலங்களின் (heating sources) 100 சதவிகித பாதுகாப்பு வழங்க ஐந்து பரிமாண பனி-குளிரூட்டப்பட்ட வெப்பச் சிதறல் முறையையும் (five-dimensional ice-cooled heat dissipation system) சமீபத்திய டீஸர் உறுதிப்படுத்தியது.


Realme X50 5G-யின் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

Realme X50 5G, 90Hz refresh rate உடன் 6.6-inch டிஸ்ப்ளே இருக்கும் என்று சில சமீபத்திய வதந்திகள் கூறியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் வரை வரும். மேலும் ,32-மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட இரட்டை செல்பி கேமரா அமைப்பும் இதில் அடங்கும். இது 64-மெகாபிக்சல் Sony IMX686 முதன்மை சென்சாரையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

Advertisement

Realme X50 Launch Date May Be January 5, CMO's Latest Post Suggests

Realme X50 5G to Be Powered by Snapdragon 765G SoC, Company Reveals

Realme X50 5G to Come With Enhanced VOOC 4.0 Flash Charge Fast Charging Tech, Teaser Reveals

Advertisement

Realme X50 5G Teased to Offer 100 Percent Coverage of Heating Sources, Include 5D Ice-Cooled Heat Dissipation System

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  2. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  3. டெக்னோ பாப் எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி; 'டெக்னோ ஸ்பார்க் கோ 3'-ன் மறு பதிப்பா இது?
  4. 13-இஞ்ச் Liquid Retina திரை, Apple A18 Pro சிப் MacBook Neo இந்தியாவில்
  5. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
  6. WhatsApp குரூப்ல இப்போதான் சேர்ந்தீங்களா? கவலைப்படாதீங்க! பழைய 100 மெசேஜ்களை இனி நீங்க படிக்கலாம்
  7. ஜியோ ஹாட்ஸ்டார் சாட்ஜிபிடி வேற லெவல் என்டர்டைன்மென்ட்! இனி நம்ம ஊர் மொழியிலேயே பேசி படங்களைத் தேடலாம்
  8. சாட்ஜிபிடி இப்போ நம்ம காலேஜுக்குள்ளயே வந்துடுச்சு! 1 லட்சம் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கோர்ஸ்.. ஓபன் ஏஐ-யின் அதிரடி பிளான்
  9. டெல்லியில் 1,100-க்கும் மேற்பட்ட போலி நதிங், CMF பொருட்கள் பறிமுதல்! கூகுள் போல நதிங் நிறுவனமும் எச்சரிக்கை - முழு விவரம்
  10. இனி இன்டர்நெட் வேகம் வேற லெவல்ல இருக்கும்! கடலுக்கு அடியில் கூகுள் போடும் புதிய கேபிள் ரூட்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.