Realme X50 Pro 5G-யின் மிக உயர்ந்த வகை வேரியண்ட் தற்போது 12GB + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷனை வழங்குகிறது.
Realme X50 Pro 5G, Moss Green மற்றும் Rust Red ஆகிய வண்ணங்களில் வருகிறது
ரியல்மி விரைவில் அதன் சமீபத்திய Realme X50 Pro 5G-யில் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டை அறிமுகப்படுத்தக்கூடும். தற்போதைய வரிசையில் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் மிக உயர்ந்த கட்டமைப்பாக இருப்பதால், இது ஒரு சிறந்த வேரியண்டாக இருக்கும். Realme X50 Pro 5G-யின் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் டெனா சான்றிதழைப் பெற்றுள்ளது, இது புதிய வேரியண்ட் வளர்ச்சியில் இருப்பதைக் குறிக்கிறது. Realme X50 Pro 5G சீனா வெளியீடு மார்ச் 12-ஆம் தேதிக்கு நடைபெற இருப்பதால், புதிய வேரிய்ண்ட், வெளியீட்டு நாளில் காண்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், Realme X50 Pro-வின் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷம் சீன சந்தைக்கு பிரத்தியேகமாக இருக்கும், அல்லது அது இந்தியாவிலும் உள்ள கடைகளுக்கு இது கிடைக்குமா என்பதில் எந்த வார்த்தையும் இல்லை.
TENAA பட்டியலில் 512GB-ஐ ஒரு புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷனாக மட்டுமே குறிப்பிடுகிறது, ஆனால் ரேம் திறனின் தேர்வு 6GB, 8GB மற்றும் 12GB-ல் ஒரே மாதிரியாக உள்ளது. பெரும்பாலும், Realme X50 Pro 5G-யின் 512 ஜிபி ஸ்டோரேஜ் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும், இது Xiaomi தனது Mi 10 Pro ஃபிளாக்ஷிப்பிற்காக வழங்கிய இணையான கட்டமைப்போடு பொருந்துகிறது. இருப்பினும், இந்திய சந்தைக்கு Realme X50 Pro 5G-யின் 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்டின் வருகையை ரியல்மி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
![]()
Realme X50 Pro 5G-யின் 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் சீன சந்தைக்கு பிரத்யேகமாக வரவுள்ளது
Photo Credit: TENAA
Realme X50 Pro 5G-வின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.37,999-யாகவும், 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு ரூ.39,999-யாகவும் மற்றும் டாப்-ஸ்பெக் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.44,999-யாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் Moss Green மற்றும் Rust Red ஆகிய வண்ணங்களில் வருகிறது.
Realme X50 Pro 5G, ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது Realme UI உடன் Android 10-ல் இயங்குகிறது. இந்த போன் 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.44 இன்ச் முழு எச்டி + ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. இதில், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பொக்கே பிடிப்புக்கான 2-மெகாபிக்சல் போட்ரெயிட் கேமரா ஆகியவற்றுடன் f/1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், உள்ளது. போனின் முன் கேமராவில் இரண்டு சென்சார்கள், 32 மெகாபிக்சல் பிரதான ஷூட்டர் மற்றும் மற்றொரு 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது.
Realme X50 Pro 5G-யின் இணைப்பு விருப்பங்களில் டூயல்-மோட் 5G (NSA/ SA & mainstream bands), 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS மற்றும் USB Type-C port ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது 65W சூப்பர் டார்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,200 எம்ஏஎச் பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Gallery Adds Google Photos Integration Ahead of OneDrive Sync Ending: How It Works