ரியல்மி X50 ப்ரோ விலை ரூ.3,000 வரை உயர்ந்துள்ளது. இது 6ஜிபி + 128ஜிபி வேரியண்டிற்கு ரூ.37,999 ஆகும்,
12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி X50 ப்ரோ 5G! விலை எவ்வளவு தெரியுமா?
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஜூலை 13 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ரியல்மி X50 ப்ரோ 5ஜி. இந்த போன் பிப்ரவரியில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் ஃபிளாஷ் விற்பனை மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரியல்மி X50 ப்ரோ 5 ஜி இன் கடைசி ஃபிளாஷ் விற்பனை மார்ச் மாதம் நடைபெற்றது, மேலும் நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்த போன் விற்பனையில் கிடைக்காத நிலையில் இந்த தொலைபேசி இறுதியாக மீண்டும் விற்பனைக்கு வரப்போகிறது. சந்தையில் இல்லாத நேரத்தில், ரியல்மி X50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஜிஎஸ்டி வீத உயர்வு காரணமாக 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ரியல்மி X50 ப்ரோ 5ஜி 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் திருத்தப்பட்ட விலை ரூ.39,999 ரூபாய் ஆகும். இது 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.ரூ.41,999 மற்றும் 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.47,999 ஆகும். இந்த போன் ஜூலை 13ம் தேதி ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தின் வழியாக விற்பனையில் கிடைக்கும். இது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் - மோஸ் கிரீன் மற்றும் ரஸ்ட் ரெட் ஆகும்.
ரியல்மி X50 ப்ரோ விலை ரூ.3,000 வரை உயர்ந்துள்ளது. இது 6ஜிபி + 128ஜிபி வேரியண்டிற்கு ரூ.37,999 ஆகும், 8ஜிபி + 128ஜிபி வேரியண்டிற்கு ரூ.39,999 ஆகும், மற்றும் டாப்-ஸ்பெக் 12ஜிபி + 256ஜிபி வேரியண்டிற்கு ரூ.44,999 ரூபாய் ஆகும்.
ரியல்மி X50 ப்ரோ 5G சிறப்பம்சங்கள்
ரியல்மி X50 ப்ரோ 5ஜி ஆண்ட்ராய்டு 10ல் ரியல்மி யுஐ உடன் இயங்குகிறது மற்றும் 6.44 இன்ச் முழு எச்டி +(1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், தொலைபேசியில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC உள்ளது, இது அட்ரினோ 650 ஜி.பீ.யு மற்றும் 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. ரியல்மி X50 ப்ரோ 5ஜில் 128ஜிபி மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.0+ சேமிப்பிடத்தை வழங்கியுள்ளது.
ரியல்மி X50 ப்ரோ 5 ஜி-ல் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை லென்ஸைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவும் உள்ளது. ஸ்மார்ட்போனில் முன்பக்கத்தில் இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பும் உள்ளது, இதில் 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 616 முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் உள்ளது.
ரியல்மி X50 ப்ரோ 5 ஜி உள்ளே ஒருங்கிணைந்த 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் கொண்ட 4,200 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி (என்எஸ்ஏ / எஸ்ஏ மற்றும் மெயின்ஸ்ட்ரீம் பேண்டுகள்), 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Bungie Says It's Not Merging Marathon and Destiny Following Leaks, Confirms Content Updates Will Be Free
BGMI Redeem Codes for September 18: Get Red Football Uniform (Wolves), Other Rewards for Free