Realme X50 Pro 5G வாங்குபவர்கள் அதன் அடுத்த விற்பனையின் போது வங்கி தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ் சலுகைகள், no-cost EMI மற்றும் பலவற்றைப் பெறலாம்.
Realme X50 Pro 5G, Moss Green மற்றும் Rust Red கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்
ஓப்போ ஸ்பின்-ஆஃப்பின் முதல் 5ஜி போனான Realme X50 Pro அடுத்த மாத தொடக்கத்தில், அடுத்த விற்பனைக்கு வருகிறது. போனின் இரண்டாவது விற்பனை மார்ச் 5-ஆம் தேதி, மதியம் 12 மணிக்கு நிறுவனத்தின் official Realme India e-store மற்றும் Flipkart வழியாக நடைபெறும்.
Realme X50 Pro 5G's விற்பனை சலுகைகளில் பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டில் 5 சதவீதம் கேஷ்பேக் மற்றும் பிளிப்கார்ட் வழியாக no-cost EMI ஆகியவை அடங்கும். ரியல்மி வலைத்தளம் மூலம் வாங்கினால், ரூ.500 மதிப்புள்ள மொபிக்விக் சூப்பர் கேஷ் மற்றும் காஷிஃபை எக்ஸ்சேஞ் வடிவத்தில் சமமான கேஷ்பேக், no-cost EMI மற்றும் ரூ.11,500 மதிப்புள்ள ஜியோ பலன்கள் போன்ற சலுகைகளைப் பெறலாம்.
இந்தியாவில் Realme X50 Pro 5G-யின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.37,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.39.999 ஆகும். 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கூடிய டாப்-ஆஃப்-லைன் மாடல் ரூ.44.999 விலைக் குறியிட்டுடன் வருகிறது. இந்த மூன்று ஆப்ஷன்களும் இந்தியாவில் இன்று மாலை 6 மணி முதல் Mass Green மற்றும் Rust Red கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.
டூயல்-சிம் (நானோ) Realme X50 Pro 5G, Realme UI உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன், 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் 6.44 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2400 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC உள்ளது, இது Adreno மற்றும் 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் f/1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் முதன்மை ஷுட்டர் அடங்கும். இந்த அமைப்பில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவும் அடங்கும். ஸ்மார்ட்போனில் முன்பக்கத்தில் இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பும் உள்ளது, இதில், f/2.5 சென்ஸுடன் 32 மெகாபிக்சல் சோனி IMX 616 முதன்மை சென்சாரும், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சாரும் அடங்கும்.
ரியல்மி 128GB மற்றும் 256GB UFS 3.0+ ஸ்டோரேஜை X50 Pro 5G-க்கு வழங்குகிறது. இணைப்பு விருப்பங்களில் 5G (NSA/ SA), 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyroscope, in-display fingerprint சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features