ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 25 மே 2020 14:23 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமில் ஸ்னாப்டிராகன் 855+ செயலி பொருத்தப்படும்
  • ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்
  • இந்த போன் மே 26 அன்று ஐரோப்பிய நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும்

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் 60 எக்ஸ் ஜூம் திறனைக் கொண்டிருக்கும்

Photo Credit: Twitter/ Realme Europe

Realme X3 SuperZoom ஸ்மார்ட்போன் மே 26 அன்று அறிமுகமாகவுள்ளது. இந்த போனில், ஸ்னாப்டிராகன் 855+ செயலி மற்றும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே பொருத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் தொடர்பாக ஐரோப்பிய ட்விட்டர் பக்கத்தில் நிறுவனம் சில போஸ்டர்களை பகிர்ந்துள்ளது. இதில் மேற்கூறிய விவரக்குறிப்பு பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, ஒரு வீடியோவும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது. இந்த போன் தொடர்பான பல கசிவுகள் மற்றும் டீஸர்கள் இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது நிறுவனம் அதன் சில தகவல்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வெளியிட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்னாப்டிராகன் 855+ SoC-யால் இயக்கப்படும்
Photo Credit: Twitter/ Realme Europe

விவரங்கள்:

ரியல்மி ஐரோப்பா ட்விட்டரில் பகிர்ந்த ஒரு போஸ்டரில், ஸ்னாப்டிராகன் 855+ செயலியுடன் AnTuTu பெஞ்ச்மார்க் மதிப்பெண் 517,743 இருப்பதைக் காட்டியது. ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூமின் இரண்டாவது போஸ்டர் எல்சிடி திரையின் புதுப்பிப்பு வீதத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் ஆகும்.

இந்த போஸ்டர்களைத் தவிர, ஒரு குறுகிய டீஸர் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், போனின் இரட்டை முன் கேமரா, குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பச்சை மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் காணப்படுகின்றன. இது தவிர, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் இதில் உள்ளது.

இது தவிர, டி.டபிள்யூ.எஸ் இயர்போன்களை அறிமுகம் செய்வது குறித்தும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர் நியோவை ரூ.2,999 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
 

வெளியீட்டு தேதி:

Realme எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போனின் டிஜிட்டல் வெளியீட்டு நிகழ்வு மே 26 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும். வெளியீட்டு நிகழ்வு நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களான ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் Realme.com-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great zoom performance in daylight
  • 120Hz display
  • Excellent app and gaming performance
  • Solid battery life
  • Good build quality
  • Bad
  • Cameras struggle in low light
  • No stereo speakers
 
KEY SPECS
Display 6.60-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐஓஎஸ் 26 அப்டேட் வந்தாச்சு! "லிக்விட் கிளாஸ்" டிசைன் முதல் அட்டகாசமான ஏஐ அம்சங்கள் வரை - என்னவெல்லாம் புதுசா இருக்கு
  2. ஒப்போ ஃபேன்ஸ் ரெடியா? புது Oppo F31 Pro+ 5G சீரிஸ்ல மூணு மாடல் வந்திருக்கு! பேட்டரி, கேமரான்னு வெறித்தனமான அம்சங்கள்
  3. பிக் பில்லியன் டேஸ் வருது! ரூ. 79,999 மதிப்புள்ள Nothing Phone 3 வெறும் ரூ. 34,999-க்கு கிடைக்குமா
  4. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா?
  5. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  6. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
  7. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா
  8. iPhone 17 ஆர்டர் பண்ணீட்டீங்களா? பெரிய ஷாக் காத்திருக்கு! விநியோகம் தாமதமாகும்னு ஆப்பிள் சொல்லுது
  9. ஐபோன் 14 வாங்க இதுதான் சரியான நேரம்! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 40,000க்கும் குறைவான விலையில்
  10. நத்திங் ஃபேன்ஸ் ரெடியா? புது இயர் 3-ல ‘டாப் பட்டன்’ இருக்காம்! அது எதுக்குன்னு தெரியுமா
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.