ரியல்மே பிராண்டின் முதன்மை ஸ்மார்ட்போனாக Realme X2 Pro இன்று சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் என்று ரியல்மே இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் (Madhav Sheth) சமீபத்தில் அறிவித்தார்.
Realme X2 Pro நேரலை விவரங்கள்:
Realme X2 Pro வெளியீட்டு நேரடி ஸ்ட்ரீம் காலை 10 மணிக்கு பெய்ஜிங் நேரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 7:30 மணியாகும். ரியல்மி சீனா இணையதளத்தில் Realme X2 Pro வெளியீட்டு நேரடி ஸ்ட்ரீமை நீங்கள் பார்க்கலாம். மேலும் இது Douyu, Momo, Qiyi, Suning மற்றும் Tmall போன்ற வலைத்தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இன்று Realme X2 Pro வெளியீடு காலை (10 மணி CET) ஐரோப்பாவிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்திய நேரப்படி (மதியம் 1:30 மணி) ஆகும். அந்த வெளியீடு நிறுவனத்தின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஸ்பெயின் தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இதுவரை, Realme X2 Pro விலை நம்பகமான கசிவுகள் மற்றும் வதந்திகளின் ஒரு பகுதியாக இருந்தது. இருப்பினும் இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X2-வி விலை, சீனாவில் CNY 1,599 (சுமார் ரூ .16,100)-யிலிருந்து, அதைவிட அதிக விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் ஆரம்ப விலை CNY 2,799 (சுமார் ரூ. 28,200)-ல் இருந்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
விவரக்குறிப்புகள்:
Realme X2 Pro, Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது. 12GB RAM மற்றும் 256GB இன்பில்ட் UFS 3.0 storage ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 90Hz Fluid Display உடன் TUV Rheinland-certified eye protection மற்றும் 64-megapixel primary sensor உடன் quad rear camera அமைப்புடன் வருகிறது. 4,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை, 50W Super VOOC flash charging மூலம் சுமார் 30 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. Realme X2 Pro, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்