இன்று ரிலீஸாகும் Realme X2 Pro, Realme 5s; சிறப்பம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

இன்று ரிலீஸாகும் Realme X2 Pro, Realme 5s; சிறப்பம்சங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!

Realme X2 Pro, Snapdragon 855+ SoC-யால் இயக்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Realme X2 Pro, 90Hz Fluid டிஸ்பிளே, 64-megapixel பிரதான கேமரா கொண்டுள்ளது
  • ரியல்மி போன்களின் விற்பனை சேனல்களில் ஒன்றாக பிளிப்கார்ட் இருக்கும்
  • Realme 5s, 48-megapixel பிரதான கேமரா இருப்பதை கிண்டல் செய்கின்றன
விளம்பரம்

Realme X2 Pro மற்றும் Realme 5s ஆகியவை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Realme X2 Pro போன் இரண்டு ப்ரீமியம் மாறுபாடாகும். இது, கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Realme 5s இன்று இந்தியாவில் அறிமுகமாகும். மேலும், display, processor, camera information மற்றும் பலவற்றை டீஸர்கள் வெளிப்படுத்தியுள்ளன.


Realme X2 Pro, Realme 5s லைவ் ஸ்ட்ரீம் விவரங்கள்:

இந்தியாவில் Realme X2 Pro மற்றும் Realme 5s வெளியீட்டு நிகழ்வு இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. வெளியீட்டு நிகழ்வு புதுதில்லியில் நடைபெறும். மேலும், அவர்களின் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தற்போது, ​​நிறுவனம் இணையதளத்தில் விருப்பமுள்ளவர்களின் பதிவுகளை எடுத்து வருகிறது. Realme X2 Pro-வுக்கான பிளைண்ட் ஆர்டர் விற்பனை இரண்டு நாட்களுக்கு நடத்தப்பட்டது. இதில் பயனர்கள் ரூ. 1,000 வைப்பு செலுத்தி போனை பெறமுடியும். அந்த விற்பனை முடிந்துவிட்டது மற்றும் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் Realme X2 Pro-வை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்வார்கள். கீழே பதிக்கப்பட்ட நேரடி ஸ்ட்ரீமை நீங்கள் பார்க்கலாம்.

இந்தியாவில் Realme X2 Pro, Realme 5s-ன் விலை (எதிர்பார்க்கப்படுபவை)

Realme X2 Pro மற்றும் Realme 5s விலை மற்றும் கிடைக்கும் தன்மை இன்று நிகழ்வில் உறுதிப்படுத்தப்படும். நாங்கள் யூகிக்க வேண்டுமென்றால், Realme X2 Pro-வின் விலை நிர்ணயம் அதன் சீனாவின் விலைகளைப் போலவே இருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ளபடி, இந்த போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு CNY 2,699 (சுமார் ரூ. 27,200) முதல் ஆரம்பமாகிறது. அதே நேரத்தில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் CNY 2,899 (சுமார் ரூ.29,200)-யாக விலையிடப்படுள்ளது. மேலும், 12GB RAM + 256GB ஸ்டோரெஜ் வேரியண்ட் CNY 3,299 (சுமார் ரூ. 33,200)-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி வெள்ளை மற்றும் நீல வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் எந்த RAM + ஸ்டோரேஜ் வேரியண்ட் அல்லது விருப்பங்களில் தொடங்கப்படும் என்பதில் தெளிவு இல்லை.

Realme 5 மற்றும் Realme 5 Pro இடையே எங்காவது விலை நிர்ணயம் செய்யப்படலாம். இது Realme 5 போன்ற பிராசசரை ஒருங்கிணைக்கிறது. ஆனால், அதன் quad கேமரா அமைப்பில் Realme 5 Pro-ஐக் போலவே 48-megapixel சென்சார் உள்ளது. நினைவு கூற, Realme 5 Pro-வின் 4GB + 64GB வேரியண்டின் விலை ரூ. 13,999 முதல் ஆரம்பமாகிறது. சில்லறை விற்பனையில் போனின் 6GB + 64GB மற்றும் 8GB + 128GB வேரியண்ட் முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 16,999-யாக உள்ளது. இதேபோல், Realme 5-ன் 3GB + 32GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 9,999 முதல் ஆரம்பமாகிறது. போனின் 4GB + 64GB வேரியண்ட் ரூ. 10,999 மற்றும் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 11,999-யாக விலை குறியீட்டைக் கொண்டுள்ளது. Realme 5 Pro-வை விட Realme 5s சற்றே குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படடும். ஆனால், Realme 5-ஐ விட சற்றே அதிகமாக இருக்கும். 

realme5s main Realme 5s

quad கேமரா அமைப்பை Realme 5s கிண்டல் செய்கின்றன

Photo Credit: YouTube/ Flipkart

Realme X2 Pro மற்றும் Realme 5s போன்கள் பிளிப்கார்ட்டில் கிடைப்பதைக் குறிக்கும் வகையில் கிண்டல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இது Realme online store-ரிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

Brick மற்றும் Cement finish உடன் Realme X2 Pro Master Edition சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இது single 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்பில் வழங்கப்படுகிறது. சீனாவில் இந்த மாறுபாடு CNY 3,299 (சுமார் ரூ. 33,200)-யாக விலையிடப்படுள்ளது. இந்த மாறுபாடு இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுமா இல்லையா என்பதில் எந்த தகவலும் இல்லை.


Realme X2 Pro-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

Realme X2 Pro ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், போனின் வரக்குறிப்புகள் ஏற்கனவே அறியப்பட்டுள்ளன. டூயல்-சிம் (நானோ) Realme X2 Pro, ColorOS 6.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. மேலும், 20:9 aspect ratio உடன் 6.5-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED Fluid டிஸ்பிளே, 90Hz refresh rate, 135Hz touch sampling rate, DC dimming 2.0 தொழில்நுட்ப ஆதரவு மற்றும் 91.7 சதவீதம் screen-to-body ratio, அதேபோன்று Corning Gorilla Glass 5 protection ஆகிய அம்சங்கள் உள்ளன.

மேலும், இந்த போன் 6GB, 8GB மற்றும் 12GB of LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டு, Qualcomm Snapdragon 855+ octa-core SoC-யால் இயக்கப்படுகிறது. Realme X2 Pro 64 ஜிபி (டூயல்-சேனல் UFS 2.1), 128 ஜிபி (UFS 3.0) மற்றும் 256 ஜிபி (UFS 3.0) ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

கேமராக்களைப் பொறுத்தவரை, Realme X2 Pro, six-piece, f/1.8 lens உடன் 64-megapixel Samsung ISOCELL Bright GW1 முதன்மை சென்சாருடன் quad rear கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில் f/2.5 telephoto lens உடன் 13-megapixel இரண்டாம் நிலை சென்சார், f/2.2 aperture உடன் 115-degree ultra-wide-angle லென்ஸோடு 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2-megapixel depth சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கியது. செல்பிகளுக்காக, போனின் முன்புறத்தில் f/2.0 lens உடன் 16-megapixel Sony IMX471 கேமரா சென்சார் உள்ளது. இந்த முன்புற கேமரா portrait shots-ஐ ஆதரிக்கும்.

Realme X2 Pro-வில் 50W SuperVOOC Flash சார்ஜ் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியை ரியல்மி வழங்குகிது. வெறும் 33 நிமிடங்களில் தொலைபேசியை முழுமையாக சார்ஜ் செய்ய தனியுரிம தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 18W USB PD மற்றும் Quick சார்ஜ் ஆதரவும் உள்ளது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். போனில், Dolby Atmos மற்றும் Hi-Res Audio தொழில்நுட்ப ஆதரவுடன் இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன. கூடுதலாக in-display fingerprint சென்சாரும் உள்ளது.


Realme 5s-ன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படுபவை)

டீஸர்கள் வழியாக உறுதிப்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகளில் தொடங்கி, waterdrop-style notch உடன்  6.51-inch HD டிஸ்பிளே Realme 5s-யில் காணப்படுகின்றன. இந்த தொலைபேசி Snapdragon 665 பிராசசர் மூலம் இயக்கப்படும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த தொலைபேசி 48-megapixel பிரதான சென்சார் கொண்ட quad rear கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். rear fingerprint  சென்சார், diamond-cut back panel finish மற்றும் குறைந்த பட்சம் சிவப்பு வண்ண விருப்பத்தில் வருவதாக இந்த போன் கிண்டல் செய்யப்படுகிறது.

சமீபத்திய Geekbench பட்டியல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆப்ஷனை பேக் செய்ய தொலைபேசியை குறிக்கிறது. நாம் மீண்டும் ஒரு முறை ஊகிக்க வேண்டுமானால், பின்புறத்தில் உள்ள சென்சார் அமைப்பு Realme 5 Pro-வில் உள்ளதைப் போலவே, 48-megapixel முதன்மை கேமரா, wide-angle lens, depth சென்சார் மற்றும் macro lens ஆகியவை இருக்கும்.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality and design
  • Stereo speakers sound good
  • Smooth app, gaming performance
  • Good battery life, super-fast charging
  • Vivid 90Hz display
  • Bad
  • Heats up under load
  • Low-light video quality isn’t great
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Cameras perform well in daylight
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Cameras struggle in low light
  • A little heavy and bulky
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »