ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ அப்டேட் மூலம் ரியல்மி எக்ஸ் 2 பயனர்கள் மென்பொருள் பதிப்பு RMX1992AEX_11.C.05-ஐப் பெறுகின்றனர்.
மென்பொருள் பதிப்பு A.19-ல் உள்ள Realme X2 பயனர்கள் Realme UI அப்டேட்டைப் பெறத் தொடங்கியுள்ளனர்
Realme X2, Android 10 உடன் Realme UI அப்டேட் பெறத் தொடங்கியுள்ளது. இந்த புது அப்டேட் ஏ.19 பதிப்பைக் கொண்ட பயனர்களுக்கு கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் 2-வின் இந்த அப்டேட் RMX1992AEX_11.C.05 என்ற மென்பொருள் பதிப்பைக் கொண்டுவருகிறது. ரியல்மி எக்ஸ் 2 பயனர்கள் சமீபத்திய ரியல்மி யுஐ அப்டேட் மூலம் பல்வேறு செயல்திறன் மேம்பாடுகளைப் பெறுவார்கள்.
இந்த அப்டேட் Smart Sidebar-ஐக் கொண்டுள்ளது.
இது, 3-விரல் ஸ்கிரீன்ஷாட் சைகை ஆரவைக் கொண்டுள்ளது.
landscape mode-ல் சைகைகளுக்காக Navigation Gestures 3.0 உள்ளது.
அப்டேட்டில் பல்வேறு பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள் உள்ளன.
இதில், ஃபோகஸ் மோட், புதிய சார்ஜிங் அனிமேஷன், திரை பதிவுக்கு இடைநிறுத்த அப்ஷன் மற்றும் TalkBack floating prompts போன்றவை உள்ளன.
மேலும், புதிய லைவ் வால்பேப்பர்கள், டைனமிக் வானிலை ரிங்டோன் மற்றும் ஒரு சிம்பில் மோடும் உள்ளது.
ரியல்மி பல்வேறு கேமரா-மையப்படுத்தப்பட்ட மேம்படுத்தல்களையும் வழங்கியுள்ளது.
இந்த அப்டேட் ரியல்மி ஷேர் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம், Oppo, Vivo மற்றும் Xiaomi பயனர்களுடன் கோப்புகளைப் (files) பகிரலாம்.
இறுதியாக, ரியல்மி எக்ஸ் 2 பயனர்கள் Settings menu-க்குச் சென்று ரியல்மி யுஐ அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Poco M8 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More
Oppo Reno 15 Series 5G Launching Today: Know Price in India, Features, Specifications and More