ரியல்மீ X மற்றும் ரியல்மீ 3i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ளது. முன்னதாக சீனாவில் இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் கடந்த மே மாதமே அறிமுகமானது. அதன்பின், மிக நீண்ட காத்திருப்பிற்குப்பிறகு இந்த ஸ்மார்ட்போன் இறுதியாக இந்தியாவில் அறிமுகமாகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்மார்ட்போனுடன் 'ரியல்மீ 3i' என்ற ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது ரியல்மீ நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் முதல்முறையாக இந்தியாவில்தான் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மீ X, ரியல்மீ 3i: அறிமுக நிகழ்வு!
ரியல்மீ X மற்றும் ரியல்மீ 3i ஆகிய ஸ்மார்ட்போன்கள், இந்தியாவில் மதியம் 12:30 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வை தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பவுள்ளது ரியல்மீ நிறுவனம். இன்றைய நிகழ்வில் ரியல்மீ X மற்றும் ரியல்மீ 3i ஸ்மார்ட்போன்களின் விலை, சிறப்பம்சங்கள், மற்றும் விற்பனை தேதியை ரியல்மீ நிறுவனம் அறிவிக்கவுள்ளது.
ரியல்மீ X: எதிர்பார்க்கப்படும் விலை!
முன்னதாக, சீனாவில் வெளியான இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வகைகளை கொண்டிருந்தது. அதில் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட ரியல்மீ X 1,499 யுவான்கள் (15,000 ரூபாய்) என்ற விலையில் விற்பனையானது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,799 யுவான்கள் (18,100 ரூபாய்) என்ற விலையில் விற்பனையாகிறது. இவற்றில் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு ரியல்மீ X ஸ்மார்ட்போன் மட்டுமே ஸ்பைடர்-மேன் வெர்சன் கொண்டு சீனாவில் அறிமுகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, மாதவ் சேத் இந்த ஸ்மார்ட்போன் 18,000 ரூபாய் என்ற அளவில் அறிமுகமாகும் என கூறியிருந்தது கவணிக்க வேண்டியது.
ரியல்மீ X: சிறப்பம்சங்கள்! (சீனாவில் வெளியான வகை)
ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ள இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போனின் திரை 6.53-இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) திரை அளவு, 19.5:9 திரை விகிதம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் இதன் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. 4G வசதி, வை-பை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
ரியல்மீ 3i: சிறப்பம்சங்கள்!
இன்னும் அறிமுகமாகவில்ல என்றாலும் ரியல்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் குறித்து சில டீசர்களை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டியூட்ராப் நாட்சுடன் 6.22-இன்ச் திரை, மீடியாடெக் ஹீலியொ P60 எஸ் ஓ சி ப்ராசஸர், 4,230mAh பேட்டரி, இரண்டு பின்புற கேமரா, போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 3GB RAM + 32GB சேமிப்பு அளவு கொண்டு வெளியான ரியல்மீ 3 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்