சீனாவில் ரியல்மி V5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு வரும் போது அதன் சிறப்பம்சங்கள், விலை எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி தரப்பில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த V5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே, குவாட் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்ம்சங்கள் உள்ளன.
கேமராவைப் பொறுத்தவரையில் பின்பக்கத்தில் 48MP பிரைமரி கேமராவும் அதற்கு ஆதரவாக 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ சென்சார் கேமரா, 2MP மோனோ குரோம் கேமரா உள்ளன. இதே போல் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா, அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்பட்டுள்ளன.
5,000mAh சக்தி கொண்ட பேட்டரியும், 30W ஃபிளாஷ் சார்ஜரும் வழங்கப்படுகிறது. USB டைப் சி போர்ட், பக்கவாட்டில் விரல் ரேகை சென்சார் உள்ளன. மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC பிராசசரில், ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தில் இந்த ரியல்மி V5 ஸ்மார்ட்போன் செயல்படுகிறது.
திரை அளவு 6.5 இன்ச் ஆகும். ரியல்மி V5 ஸ்மார்ட்போன் ஓரளவு பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது. 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை 1,399 CNY (இந்திய மதிப்பில் ரூ.15,000) என்றும் 8ஜிபி ரேம், 128ஜிபி வேரியன்டின் விலை 1,899 CNY (இந்திய மதிப்பில் 20,400) என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்