இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் Realme C63 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Realme C63 5G செல்போன் பற்றி தான்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான Realme நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இப்போது பட்ஜெட் விலையில் Realme C63 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக Realme உருவானது. Realme நிறுவனம் ‘C' வரிசை போன்களில் இந்த Realme C63 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
6.67 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் டிமான்சிட்டி 5300 சிபிசெட், ஆண்ட்ராய்டு 14 OS இயங்குதளம் மூலம் செயல்படுகிறது. 5,000mAh பேட்டரி, 10 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் வந்துள்ளது. பின்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது. 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி ரேம் என மூன்று மாடல்களில் கிடைக்கிறது. 128ஜிபி வரை செல்போன் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டு மூலம் இரண்டு TB வரைக்கும் இதனை அதிகப்படுத்திக்கொள்ளலாம். 5ஜி நெட்வொர்க் வசதியுடன் வந்துள்ள இந்த செல்போன் வரும் 20ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது இதன் விலை ரூ.9,999 முதல் ஆரம்பமாகிறது.
எஸ்டி கார்டு சிலாட் உடன் Hybrid Dual SIM சிலாட் வருகிறது. Bottom-ported Speaker, சைடு-மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியுடன் வருகிறது. மேலும், 3.5 மிமீ Audio Jack மற்றும் Type-C Charging Port உள்ளது. IP54 மதிப்பீடு கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 10W குயிக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்லிம் லுக்கில் 7.94 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. 190 கிராம் எடை வருகிறது. 5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டிகள் வருகின்றன.
அறிமுக சலுகையில் 1000 ரூபாய் டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். Starry Gold மற்றும் Forest Green ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போனின் பின்புறம் லெதர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. Air gestures மற்றும் மினி கேப்சூல் 2.0 போன்ற அம்சங்களுடன், IP54 சான்றிதழை பெற்றுள்ளது. வெறும் ரூ.9,999 ஆரம்ப விலையில் இந்த மாடலை வாங்கி கொள்ளளலாம். கம்மியான பட்ஜெட்டில 5ஜி போனை வாங்க திட்டமிட்டவர்களுக்கு இது பக்கா ஆப்ஷனாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India