Realme Narzo 80 Ultra அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகிறது
Photo Credit: Realme
Realme Narzo 70 Turbo 5G (படம்) இந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Realme Narzo 80 Ultra செல்போன் பற்றி தான்.
Realme Narzo 80 Ultra அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகிறது. வரவிருக்கும் போன் நார்சோ சீரியஸ் ஸ்மார்ட்போன்களில் முதல் அல்ட்ரா-பிராண்டட் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. Narzo 80 Ultra செல்போனின் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி, அதன்மெமரி திறன் பற்றிய விவரங்கள் இப்போது கசிந்துள்ளன. கடந்த சில வாரங்களாக Realme Narzo 70 Curve செல்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் Realme Narzo 80 Ultra பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Realme அதனுடைய Realme 14x மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
RMX5033 என்ற மாடல் எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போனாக Realme Narzo 80 Ultra விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி 91Mobiles வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 2025 ஜனவரி இறுதியில், நிறுவனத்திடமிருந்து முதல் "நார்சோ அல்ட்ரா" மாடலாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
Realme Narzo 80 Ultra நார்சோ தொடரில் மிக பவர்புல்லான மாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செல்போன் வெள்ளை மற்றும் தங்க வண்ணத்தில்வெளியாகும் என்று அறிக்கை கூறுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடங்கிய மெமரியுடன் வரும் என கூறப்படுகிறது. ஆனால் மற்ற ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாவில்லை.
மற்றொரு சமீபத்திய அறிக்கை RMX5030 கொண்ட ஒரு செல்போன் ஜனவரி 2025 இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது. இது Realme P3 Ultra என நம்பப்படுகிறது. இது 12GB வரை ரேம் மற்றும் 256GB வரையிலான மெமரியை கொண்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் செப்டம்பர் மாதம் Realme P2 Pro 5G செல்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் 21,999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆனது.
RMX3990 என்ற மாடல் எண்ணுடன் கூடிய Realme Narzo 70 Curve டிசம்பர் மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் அப்படி கூறப்பட்ட ஸ்மார்ட்போனை வெளியிடுவதற்கான திட்டங்களை Realme நிறுவனம் இன்னும் அறிவிக்காததால் இந்த செல்போனும் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரியவருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation