Realme Narzo 10 மற்றும் Realme Narzo 10A ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மி நர்சோ 10, ரியல்மி 6i-யின் மறுபெயரிடப்பட்ட போனாகவும், ரியல்மி நர்சோ 10 ஏ, ரியல்மி சி 3-யின் மாற்றமாகவும் இருக்கிறது. இந்த இரண்டு போன்களும் மார்ச் 26 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வெளியீடு ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவில் போனின் ஒரே 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999-க்கு விற்கப்படும். இந்த போன் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கும்.
போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,499-க்கு விற்கப்படும். இந்த போன் ப்ளூ மற்றும் ஒயிட் நிறத்தில் வெளிவரும்.
இரண்டு போன்களும் இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் விற்பனை செய்யப்படும். ரியல்மி நர்சோ 10-ன் முதல் விற்பனை மே 18 மதியம் 12 மணிக்கு தொடங்கும். ரியல்மி நர்சோ 10 ஏ -வின் முதல் விற்பனை மே 22 மதியம் 12 மணிக்கு தொடங்கும்.
இந்த போன் நிறுவனத்தின் Realme UI உடன் Android 10-ல் இயங்கும். போனில் 6.5 அங்குல முழு எச்டி திரை (720 x 1600 பிக்சல்கள்) உள்ளது. இது MediaTek Helio G80 செயலியைக் கொண்டுள்ளது. இதில் மாலி ஜி 52 ஜி.பீ.யூ மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
போனின் குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல்கள் முதன்மை கேமரா 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. கேமரா அமைப்பில் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளது. முன் கேமரா வாட்டர் டிராப் நாட்சில் அமைந்துள்ளது. அதில் 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த போனில் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதில் மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவும் கிடைக்கிறது. இணைப்பிற்காக, போனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ் / ஏ-ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உள்ளது. போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. போனின் உள்ளே 18W ஃபாஸ்ட் சார்ஜ் உதவியுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. போனின் எடை 199 கிராம் ஆகும்.
இந்த போன் நிறுவனத்தின் ரியல்மி யுஐ உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இது 6.5 இன்ச் எச்டி + (720x1600 பிக்சல்கள்) வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் உள்ளே MediaTek Helio G70 செயலி மற்றும் 3 ஜிபி ரேம் இருக்கும்.
இந்த தொலைபேசி மூன்று பின்புற கேமராக்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் உருவப்படம் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளது. செல்ஃபி எடுக்க 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இந்த போனில் 32 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதை மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக நீட்டிக்க முடியும். இணைப்பிற்காக, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. போனின் எடை 195 கிராம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்