25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு?

25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு?

ரியல்மி யு1 ஸ்மார்ட்பிஓனில் முன்பக்கம் 25 மெகா பிக்செல்ஸ் செல்பி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்
  • ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC
  • இதன் கேமிங் திறன் அபாரமாக உள்ளது.
  • இந்தியாவில் ரியல்மி யு1ன் விலை ரூ.11,999லிருந்து ஆரம்பமாகிறது.
விளம்பரம்

ஸ்மார்ட்போன் சந்தையானது. சியோமி மற்றும் ஹானர் போன்ற முக்கிய நிறுவனங்களால் நிறைந்துள்ளது. இருப்பினும் ரியல்மி போன்ற வளரும் நிறுவனங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ரியல்மி யு1 நிரூபித்துள்ளது. ரியல்மி தனது போர்ட்ஃபோலியோவில் மேலும் ஒரு சீரிஸை இணைத்துள்ளது.

இதன் முதல் மாடலான ரியல்மி யு1ன் விலை ரூ.11,999 ஆகும். அந்நிறுவனத்தின் முதல் 'செல்ஃபி ப்ரோ' ஸ்மார்ட்போனாகும்.

ரியல்மி யு1 ஆனது சியோமியின் ரெட்மி ஒய் சீரிஸ் உடன் போட்டியிடுகிறது. ரெட்மி ஒய் சீரிஸூம் செல்ஃபியை முக்கிய அம்சமாகக் கொண்டது.

6.3 இன்ச் திரையினைக் கொண்டுள்ள ரியல்மி யு1 450nit பிரகாசத்தினைக் பெற்றுள்ளது. இதன் மூலம் சூரிய வெளிச்சத்திலும் திரையினை தெளிவாக பார்க்கலாம். ஐபிஎஸ் பேனலான இது 1080*2340 பிக்சலினைக் கொண்டுள்ளது.

இதன் மூலம் தெளிவான வண்ணத்தில் மற்றும் கூர்மையான படத்தினை பெறமுடியும். முன்பக்கத்தில் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதிலிருக்கும் வாட்டர் டிராப் நாட்ச் அழகாக உள்ளது. ஒரு கேமரா நாட்ச் உள்ளது. குறைவான இடமே இருப்பதால் அறிவிப்பு வந்ததும் வெளிப்படும் எல்இடி இல்லை.

நமது ரிவியூவில் கருப்பு நிற போன் காட்டப்பட்டுள்ளது, இருப்பினும் நீங்கள் புளூ மற்றும் கோல்ட் நிறத்தில் இந்த போனினை பெறலாம். இதிலிருக்கும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடனடியாக செயல்படுகிறது.

ரியல்மி யு1னின் முக்கியம்சம் மற்றும் மென்பொருள்

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ரியல்மி யு1.
இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. இதுவரை ரியல்மி யு1 நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

 

ரியல்மி யு1ன் டிசைன்

ரியல்மி யு1 ஆனது பார்பதற்கு ரியல்மி 2 ப்ரோ (ரூ. 13,990) வினை போலவே இருக்கும். வளைந்த முனைகள் நல்ல பிடிமானத்தைக் கொடுக்கிறது.

பின்புறம் கொடுக்கப்பட்டிருக்கும் மேட் பூச்சு போன் கையில் இருந்து வழுவமல் பார்த்துக் கொள்கிறது. 8mm தடிமனானது, ரியல்மி யு1-ன் எடை குறைவு என்பதால் எளிதாக பற்றிக் கொள்ளலாம். பவர் மற்றும் ஒலியினை கூட்ட குறைக்க உதவும் பட்டன்கள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

இடதுபக்கம் இருக்கக்கூடிய சிம் டிரேயானது இரு நானோ சிம்கள் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டுகளை பயன்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது. ரியல்மி யு1ன் அடிப்பாகத்தில் ஸ்பீக்கர் கிரில், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 mm ஹெட்போன் சாக்கெட்டினைக் கொண்டுள்ளது.

இதில் யுஎஸ்பி டைப் சி இல்லாதது சிறிய குறையே. இதிலிருக்கும் முக்கிய குறைபாடு என்னவென்றால், ஸ்பீக்கர் அடிப்பாகத்தில் இருப்பதால் கிடைமட்டமாக போனை பிடிக்கும்போது ஒலி தடைபடுவதாகும்.

Realme U1 back ndtv u1வழுவழுப்பான பின்பக்கத்தை ரியல்மி 1 கொண்டுள்ளது. இருப்பினும் இது எளிதில் உராய்வுக்கு உள்ளகாது.ஆனால் தூசியினை ஏற்றுக்கொள்ளும்.

Realme U1 ports ndtv u1ரியல்மி யு1-னினைக் கிடைமட்டமாக பிடிக்கும் போது ஸ்பீக்கருக்காக கொடுக்கப்பட்டிருக்கும் துளை அடைபடுகிறது.

 

Realme U1 apps ndtv u11

 

 

Realme U1 sim ndtv u11

 

 

 

ரியல்மி யு1னின் முக்கியம்சம் மற்றும் மென்பொருள்

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ரியல்மி யு1.
இந்த ஸ்மார்ட்போன் உலகில் முதல்முறையாக மீடியாடெக் ஹீலியோ பி70 SoC கொண்டுள்ளது. இதுவரை ரியல்மி யு1 நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Smooth app and gaming performance
  • Looks good
  • Bright and crisp display
  • Cameras do well in good light
  • Fast face unlock
  • Bad
  • No 4K recording and video stabilisation
  • Cameras struggle in low light
  • Body attracts smudges easily
Display 6.30-inch
Processor MediaTek Helio P70
Front Camera 25-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. ரூபாய் 1 லட்சத்துக்கு கீழ் பட்ஜெட்டில் தரமான லேப்டாப் வேண்டுமா
  2. பட்ஜெட் விலையில் கிடைக்கும் Air Conditioners இப்போ விட்டா அவ்வளோ தான்
  3. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு Amazon Great Republic Day Sale 2025 ஆபர்
  4. Amazon Great Republic Day Sale 2025: ஸ்மார்ட் டிவிகளில் அதிரடி விலைகுறைப்பு
  5. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  6. Amazon Great Republic Day Sale 2025 விற்பனையில் அடித்து தூக்கும் டேப்லெட்கள்
  7. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  8. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  9. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  10. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »