Realme 16 Pro+ ஸ்மார்ட்போனின் சிப்செட் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டுடன், முந்தைய மாடல்களை விட அதிக பெர்பாமன்ஸை வழங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Photo Credit: Realme
जानेवारीच्या आधी Realme ने Realme 16 Pro मालिकेतील प्रमुख तपशीलांची पुष्टी करण्यास सुरुवात केली आहे.
2026-ன் ஆரம்பத்திலேயே ஸ்மார்ட்போன் மார்க்கெட்டை ஒரு கலக்கு கலக்க ரியல்மி நிறுவனம் தயார் ஆகிடுச்சு. வர்ற ஜனவரி 6-ஆம் தேதி இந்தியாவில அறிமுகமாகப்போற Realme 16 Pro+ பத்தின பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்போ வெளியாகி இருக்கு. குறிப்பா, இந்த போன்ல என்ன சிப்செட் பயன்படுத்தப்போறாங்க? இதோட வேகம் எப்படி இருக்கும்னு எதிர்பார்த்துட்டு இருந்தவங்களுக்கு இப்போ ஒரு தெளிவான பதில் கிடைச்சிருக்கு.
இந்த போன்ல குவால்காம் நிறுவனத்தோட லேட்டஸ்ட் Snapdragon 7 Gen 4 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கு. இதுக்கு முன்னாடி வந்த ரியல்மி 15 ப்ரோ-விலயும் இதே சிப்செட் தான் இருந்ததுன்னாலும், இந்த முறை ரியல்மி சில மேம்பாடுகளைச் செஞ்சிருக்காங்க. இதோட பெர்பாமன்ஸை செக் பண்றதுக்காக நடத்தப்பட்ட அன்டுடு (AnTuTu) பெஞ்ச்மார்க் சோதனையில, இந்த போன் கிட்டத்தட்ட 1.44 மில்லியன் (1.44 Million) புள்ளிகளைப் பெற்று அசத்தியிருக்கு. ரியல்மி 15 ப்ரோ மாடல் 1.23 மில்லியன் புள்ளிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, முந்தைய மாடலை விட இதுல ஒரு கணிசமான பெர்பாமன்ஸ் பூஸ்ட் இருக்குன்னு சொல்லலாம்.
கேமிங் விளையாடுறவங்களுக்கும், மல்டி-டாஸ்கிங் பண்றவங்களுக்கும் இது ஒரு ஸ்மூத்தான எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும். இதுல 12GB வரைக்கும் LPDDR5X ரேம் மற்றும் 512GB வரைக்கும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் இருக்கும்னு சொல்லப்படுது. சிப்செட் மட்டும் இல்லாம, இந்த போன்ல இன்னும் சில 'வெயிட்டான' விஷயங்கள் இருக்கு. அதுல ஒன்னு இதோட 7,000mAh Titan Battery. ஒருமுறை சார்ஜ் பண்ணா 21 மணிநேரம் யூடியூப் வீடியோ பாக்கலாம்னு ரியல்மி கிளைம் பண்றாங்க. இதுக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு.
டிஸ்ப்ளே பக்கம் பார்த்தீங்கன்னா, 1.5K ரெசல்யூஷன் கொண்ட வளைந்த AMOLED ஸ்க்ரீன் கொடுத்திருக்காங்க. இதோட பீக் பிரைட்னஸ் 6,500 நிட்ஸ் (nits), இது வெயில்ல கூட தெளிவா தெரியும். கேமரா விஷயத்துல சாம்சங் HP5 சென்சார் கொண்ட 200MP மெயின் கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கு. இதனால 6x வரைக்கும் லாஸ்லெஸ் ஜூம் பண்ணி தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும்.
கூடுதலா சொல்லணும்னா, இந்த போன்ல IP69 ரேட்டிங் இருக்கு, அதாவது தண்ணிக்குள்ள விழுந்தா கூட ஒன்னும் ஆகாது. அப்புறம் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் வசதியும் மெயின் மற்றும் பிரண்ட் கேமரா ரெண்டுலயும் கொடுத்திருக்காங்க. இந்தியாவில இதோட விலை 35,000 ரூபாயில இருந்து 45,000 ரூபாய்க்குள்ள இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது. ரியல்மி UI 7.0 மூலமா புது புது AI அம்சங்களையும் இதுல நாம எதிர்பார்க்கலாம்.
மொத்தத்துல, சூப்பரான டிசைன், பவர்ஃபுல் சிப்செட், பிரம்மாண்டமான பேட்டரின்னு ஒரு ஆல்-ரவுண்டர் போனா Realme 16 Pro+ வரப்போகுது. இந்த போன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ஜனவரி 6-க்காக நீங்களும் வெயிட் பண்றீங்களா? கீழ கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Turbo 5, Redmi Turbo 5 Pro to Be Equipped With Upcoming MediaTek Dimensity Chips, Tipster Claims