Realme தொலைபேசிகளில் இன்று நள்ளிரவு தொடங்கி, அதாவது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே.காம் வழியாக (அக்டோபர் 12) நள்ளிரவு 12 மணி முதல் பல தள்ளுபடிகள் மற்றும் பிற ஒப்பந்தங்களை வழங்கப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் அக்டோபர் 16 வரை தொடரும். ரியல்மே பண்டிகை நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக சலுகைகள் மற்றும் தள்ளுபடியைப் பெறும் சில ரியல்மே தொலைபேசிகள் Realme 5, Realme 5 Pro, Realme 3, Realme 3 Pro, Realme X மற்றும் Realme C2 ஆகும். Realme விற்பனை பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனைடன் ஒத்துப்போகிறது.
பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் இரண்டிலும், Realme C2-வின் 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜுக்கு, ரியல்மே பண்டிகை நாட்கள் விற்பனை காலத்தில் e-retailer மூலம் 1,000 ரூபாய் தள்ளுபடியை பெறலாம். கூடுதலாக, Realme 5-யின் 3 ஜிபி + 32 ஜிபி, 4 ஜிபி + 128 ஜிபி, 4 ஜிபி + 64 ஜிபி, Realme 5 Pro, மற்றும் Realme 3 Pro ஆகியவையும் 1,000 ரூபாயும், Realme 2 Pro-விற்கு ரூ. 1,991 தள்ளுபடி கிடைக்கும். கடைசியாக, Realme 3-க்கு ரூ. 500 தள்ளுபடி கிடைக்கும்.
Realme phone | Discount | Discounted price |
---|---|---|
Realme C2 (2GB + 32GB) | Rs. 1,000 | Rs. 5,999 |
Realme C2 (3GB + 32GB) | Rs. 1,000 | Rs. 6,999 |
Realme 3 | Rs. 500 | Rs. 8,499 |
Realme 3 Pro | Rs. 1,000 | Rs. 11,999 |
Realme 5 (3GB + 32GB) | Rs. 1,000 | Rs. 8,999 |
Realme 5 (4GB + 128GB) | Rs. 1,000 | Rs. 10,999 |
Realme 5 (4GB + 64GB) | Rs. 1,000 | Rs. 9,999 |
Realme 2 Pro | Rs. 1,991 | Rs. 8,999 |
மேற்கண்ட தள்ளுபடிகளுக்கு கூடுதலாக, Realme C2, Realme X, Realme 3, Realme 3 Pro, Realme 5 Pro, e-retailer-க்கு 10 சதவீத தள்ளுபடியும், பிளிப்கார்ட்டில் ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சம் ரூ. 1,000 வரை கிடைக்கும். மேலும், அனைத்து Realme தொலைபேசிகளும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் செலுத்துதன் மூலம் 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். Realme C2 தவிர அனைத்து Realme தொலைபேசிகளும் பிளிப்கார்ட்டில் no-cost EMI ஆப்ஷனுக்கு தகுதியுடையவை.
Realme.com- குறிப்பிட்ட சலுகைகளைப் பொறுத்தவரை, Realme X, Realme 3 Pro, Realme 5 Pro மற்றும் Realme XT ஆகியவை no-cost EMI ஆப்ஷனுக்கு தகுதி பெறும். அனைத்து Realme தொலைபேசிகளுக்கும் Realme.com-ல் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் கிடைக்கும். மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் 10 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். மற்ற Realme.com- பிரத்தியேக சலுகைகளில் Realme X, Realme 3 Pro, Realme 5 Pro, Realme 5, மற்றும் Realme XT ஆகியவற்றில் ரூ. 500 கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்