Realme C3 பிப்ரவரி 20 ஆம் தேதி தாய்லாந்து சந்தையில் லாசாடா (Lazada) மற்றும் ஷாப்பி (Shopee) மூலம் விற்பனைக்கு வரும்.
Realme C3-யின் விலை தாய்லாந்தில் (THB) 3,999 ஆகும்
Realme C3 டிரிபிள் ரியர் கேமராக்களுடன் ஒரு புதிய வேரியண்டைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வேரியண்ட் முதலில் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஏற்கனவே கிடைத்த Realme C3, நுழைவு நிலை ஸ்மார்ட்போன் ரூ.6,999-யாக விலையிடப்பட்டது. போனின் இந்தோனேசிய பதிப்பில் MediaTek Helio G70 SoC, 6.52 இன்ச் டிஸ்பிளே மற்றும் 5,000mAh பேட்டரி உள்ளிட்ட சரியான விவரக்குறிப்புகள் உள்ளன.
தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme C3 டிரிபிள் கேமரா வேரியண்டின் விலை THB 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,100) ஆகும். இது பிப்ரவரி 20 முதல் கிடைக்கும் மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களான லாசாடா (Lazada) மற்றும் ஷாப்பி (Shopee) மூலம் விற்பனைக்கு வரும்.
Realme C3-யின் Thailand variant, Indian variant-ஐப் போலவே, MediaTek Helio G70 SoC-ஐக் கொண்டிருக்கும், இது octa-core CPU ஆகும், இது 2.0GHz வரை கோர்களைக் கொண்டிருக்கும். இது 2 ஜிபி, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் வேரியண்டுகளில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. போனில் எச்டி + 6.5 இன்ச் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது, இது ரியல்மி படி, போனை 0.27 வினாடிகளில் unlock செய்ய முடியும்.
தாய்லாந்தில் புதிய Realme C3 வேரியண்ட்டின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. முதன்மை கேமரா f/1.8 aperture கொண்ட 12 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகும். இது AI HDR, 4x டிஜிட்டல் ஜூம் மற்றும் AI பியூட்டி மோடை மற்றவர்களுடன் ஆதரிக்கிறது. இரண்டாவது ஷூட்டர் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ், மூன்றாவது, 4 செ.மீ. ஷூட்டிங் தொலைவுடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் f/2.4 aperture செல்பி ஷூட்டரைப் பெறுவீர்கள், இது AI பியூட்டி மற்றும் AI எச்டிஆர் மோடைக் கொண்டுள்ளது.
இந்த டூயல்-சிம் போன் Wi-Fi 802.11 b/g/n மற்றும் Bluetooth 5.0 ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது 3.5mm headphone jack மற்றும் சார்ஜிங்கிற்காக Micro-USB port-ஐக் கொண்டுள்ளது. இது Realme UI 1.0 உடன் Android 10-ல் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26, Galaxy S26+ and Galaxy S26 Ultra Will Reportedly Go on Sale in March