ரியல்மி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ரியல்மி C15 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள், ஆஃபர்களை இங்குக் காணலாம்.
ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி C12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதேநாளில் ரியல்மி C15 என்ற ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் ரியல்மி C15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 27) முதன்முதலாக விற்பனைக்கு வருகிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ G35 SoC பிராசசர், பின்பக்கத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளன.
இந்தியாவில் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C15 ஸ்மார்ட்போனின் விலை 9,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் உடைய ஸ்மார்ட்போன் 10.999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பவர் ப்ளூ, பவர் சில்வர் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கின்றன.ரியல்மி C15 ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று மதியம் 12 மணி முதல் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ஜியோ சார்பில் 7,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகளும், மொபிகிவிக் சார்பில் 500 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் உண்டு. ஆக்ஸில் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுகு்கு 5 சதவீத ஆஃபர் வழங்கப்படுகிறது. வெளிக்கடைகளில் ரியல்மி C15 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் கிடைக்கும்.
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 ரியல்மி UI
திரை அளவு: 6.65 இன்ச் HD+
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G35 SoC
மெமரி: 64ஜிபி
எக்ஸ்பேண்டபிள் மெமரி: 256ஜிபி
கேமரா:
பின்பக்கத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. 13MP பிரைமரி கேரா, 8MP செகண்டரி சென்சார் கேமரா, 2MP மேனோகுரோம் சென்சார், 2MP ரெட்ரோ கேமரா உள்ளன. இதே போல் முன்பக்கத்தில், 8 மெகா பிக்சலுடன் செல்பி கேமரா உள்ளன.
மற்ற சிறப்பம்சங்கள்:
ரியல்மி C15 ஸ்மார்ட்போனில் 6000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ USB, பின்பக்கத்தில் விரல்ரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
Should the government explain why Chinese apps were banned? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்