இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச், ஒரே விதமான டிசைனுட் காணப்படுகின்றன
 
                இரண்டு விதமான நிறங்களில், ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளன.
ரியல்மி தரப்பில் புதிதாக இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்காக, குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் ரியல்மி C12 மற்றும் ரியல்மி C15 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ரியல்மி C12 ஆனது இதற்கு முந்தைய பதிப்பான ரியல்மி C11 இ்ன் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி C15 ஆனது C சீரிஸில் குவாட் கேமரா (நான்கு கேமராக்கள்) உடன் அறிமுகமாகியுள்ள ஸ்மார்ட்போன் ஆகும்.
இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே நாட்ச், ஒரே விதமான டிசைனுட் காணப்படுகின்றன. இரு ஸ்மார்ட்போன்களிலுமே பின்பக்கத்தில் விரல்ரேகை சென்சார் உள்ளன. கூடுதலாக இரண்டு விதமான நிறங்களில், ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளன.

ரியல்மி C12 ஸ்மார்ட்போனில் ட்ரிப்பிள் கேமரா உள்ளது
ரியல்மி C15 சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10, ரியல்மி UI
திரை அளவு: 6.5 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் ஹீலியோ G35 SoC
கேமரா:
பின்பக்கத்தில் குவாட் கேமரா உள்ளன. 13MP பிரைமரி கேமரா, 8MP  செகண்டரி கேமரா, 2 MP மோனோகுரோம் சென்சார் கேமரா, 2MP  மேக்ரோ லென்ஸ் கேமரா
முன்பக்கத்தில் 5 மெகா பிக்சலுடன் செல்பி கேமரா உள்ளது.
பேட்டரி சக்தி: 6,000mAh 
சார்ஜர்:
கூடுதல் சிறப்பம்சங்கள்:
64ஜிபி மெமரி, 256 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி, 4ஜி வோலட், வைஃபை, ப்ளூடூத் V5.0, ஜிபிஎஸ், மைக்ரோ USB, விரல் ரேகை சென்சார், 18W ஃபாஸ்ட் சார்ஜிங்..

ரியல்மி C15 ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைட் லென்ஸ் கேமரா உள்ளது
விலை மற்றும் விற்பனை தேதி:
இந்தியாவில் ரியல்மி C12 ஸ்மார்ட்போனானது அடிப்படையாக 3ஜிபி ரேம்+ 32ஜிபி மெமரி வேரியன்ட்  8,999 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. ரியல்மி C15 ஸ்மார்ட்போன் அடிப்படையாக 3ஜிபி ரேம் + 32ஜிபி மெமரி வேரியன்ட் 9,999 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம்+ 64ஜிபி மெமரி கொண்ட வேரியன்ட் 10.999 ரூபாய்க்கும் அறிமுகமாகியுள்ளன. 
ரியல்மி C12 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கும், ரியல்மி C15 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கும் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அமேசான் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஆஃப்லைனில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் ரியல்மி C12 ஸ்மாரட்போனும், செப்டம்பர் 3 ஆம் தேதி ரியல்மி C15 ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வருகின்றன.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                            
                                SpaceX Revises Artemis III Moon Mission with Simplified Starship Design
                            
                        
                     Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                            
                                Rare ‘Second-Generation’ Black Holes Detected, Proving Einstein Right Again
                            
                        
                     Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                            
                                Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India
                            
                        
                     Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report
                            
                            
                                Google's 'Min Mode' for Always-on Display Mode Spotted in Development on Android 17: Report