ரியல்மி C15, ரியல்மி C12 ஸ்மார்ட்போன்களில் 6,000mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது
Photo Credit: ரியல்மி
Realme C12 and Realme C15 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது
இந்தியாவில் ரியல்மி C12, ரியல்மி C15 ஸ்மார்ட்போன்கள் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ரெட்மி, சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக ரியல்மி நிறுவனமும் புதிய அம்சங்களுடன், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது ரியல்மி தரப்பில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளன. அவை ரியல்மி C12 மற்றும் ரியல்மி C15 ஸ்மார்ட்போன்களாகும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது.
ரியல்மி C15, ரியல்மி C12 ஸ்மார்ட்போன்களில் 6,000mAh சக்தி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் முழுமையான சிறப்பம்சங்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, மதியம் 12.30 மணிக்கு அறிமுக விழாவில் தெரியவரும்.
இதற்கு முன்பு ரியல்மி C11 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 2ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C11 ஸ்மார்ட்போனின் விலை 7,499 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதோடு ஒப்பிடுகையில் ரியல்மி C12 ஸ்மார்ட்போனின் விலை சிறிது கூடுதலாக இருக்கலாம்.
மேலும், இந்தோனேஷியாவில் கடந்த மாதம் ரியல்மி C15 அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் விலை IDR 1,999 (இந்திய மதிப்பில் 10,100 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட வேரியன்டின் விலை IDR 2,199 (இந்திய மதிப்பில் 11,100 ரூபாய்) என்று நிர்ணயிக்கப்பட்டது.
அதே போன்று தான் இந்தியாவிலும் ரியல்மி C15 ஸ்மார்ட்போனின் விலை 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Secret Rain Pattern May Have Driven Long Spells of Dry and Wetter Periods Across Horn of Africa: Study
JWST Detects Thick Atmosphere on Ultra-Hot Rocky Exoplanet TOI-561 b
Scientists Observe Solar Neutrinos Altering Matter for the First Time