சியோமி நிறுவனம் தனது 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன் திட்டத்தைப் பற்றி அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, ரியல்மீ எதிர்வரும் மாதங்களில் கேமரா முன்புறத்தில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பதை விவரித்துள்ளது. வியாழக்கிழமை புதுதில்லியில் நடைபெற்ற தனது கேமரா கண்டுபிடிப்பு பத்திரிகை நிகழ்வில், ரியல்மீ தொடர், ரியல்மீ Pro தொடர் மற்றும் ரியல்மீ X தொடர்களில் நான்கு கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மீ தனது முதல் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை தீபாவளிக்கு, அதாவது அக்டோபர் 27-க்கு முன்னதாக இந்தியாவில் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது.
ரியல்மீ பெரிதாக எந்த விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சாம்சங்கின் ஐசோசெல் பிரைட் GW1 சென்சார் 64 மெகாபிக்சல் கேமராவைத்தான் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. ரியல்மீ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட டீஸர் மூலமாக இந்த நிறுவனத்தின் வரவிருக்கும் ரியல்மீ 5 மற்றும் ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள் நான்கு-கேமரா அமைப்புகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ரியல்மீ X தொடரின் அடுத்த ஸ்மார்ட்போனும் நான்கு-கேமரா அமைப்புடன் 64- மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பதிவில் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்களை மட்டுமே வரும்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 64 மெகாபிக்சல் கேமராவை பற்றி குறிப்பிடுகையில், இந்த நிறுவனத்தின் அடுத்து வரும் நான்கு-கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன்கள் 'சூப்பர் வைட் ஆங்கிள்' புகைப்பட கேமரா, 2X டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா, 'அல்ட்ரா மேக்ரோ' புகைப்பட கேமரா ஆகியவை அடங்கும் என்றும் ரியல்மீ நிறுவனம் தெரிவித்துள்ளது.
"எங்கள் ஸ்மார்ட்போன்களின் புதிய முழு-செயல்பாட்டு நான்கு கேமரா அமைப்பு எங்கள் பயனர்களுக்கு சிறந்த கேமரா அனுபவத்தை வழங்க அல்ட்ரா ரெசல்யூஷன், சூப்பர் வைட் ஆங்கிள், அல்ட்ரா மேக்ரோ மற்றும் அல்ட்ரா நைட்ஸ்கேப் போன்ற பல்வேறு அம்சங்களுடன் நிரம்பியுள்ளது" என்று ரியல்மீ ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு கேமரா அமைப்பின் பல்வேறு திறன்களைக் காட்டும் பல புகைப்படங்களையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
Here's how you get great details when you shoot with 64MP. The resolution advantage is obvious.#LeapToQuadCamera pic.twitter.com/3VSNvSyOvU
— realme (@realmemobiles) August 8, 2019
With a shorter focus distance, you can shoot detailed macro photos. Here's a look at some samples.#LeapToQuadCamera #realme #CameraInnovationevent pic.twitter.com/5o6TXNsfdK
— realme (@realmemobiles) August 8, 2019
Here's a sample picture shot from our Ultra Wide Angle lens. #LeapToQuadCamera pic.twitter.com/ogx6DLaXcT
— realme (@realmemobiles) August 8, 2019
இது குறித்து வேறு எந்த தகவல்களும் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தீபாவளிக்கு முன்னதாக அறிமுகமாகிவிடும் என்ற தகவலை மட்டும் தந்துள்ளது ரியல்மீ நிறுவனம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்