64 மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மீயின் 4 கேமரா ஸ்மார்ட்போன், விரைவில் அறிமுகம்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 25 ஜூன் 2019 19:01 IST
ஹைலைட்ஸ்
  • 64 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகவுள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்
  • இந்தியாவில் முதலில் அறிமுகம் என மாதவ் சேத் அறிவிப்பு
  • சீனாவில், 2019-ன் இரண்டாவது பாதியில் அறிமுகம்

ரியல்மீயின் புதிய ஸ்மார்ட்போன்

Photo Credit: Weibo/ Realme

ரியல்மீ நிறுவனம், 64 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. முன்னதாக ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் சேத், இந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்தின் 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும், அது முதலில் இந்தியாவில் தான் அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியிட்டிருந்தார். தற்போது, சீன ரியல்மீ நிறுவனம் இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, 2019ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது.

வெய்போ தளத்தில், ரியல்மீ நிறுவனம், 64 மெகாபிக்சல் கேமரா கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் 64 மெகாபிக்சல் கெமராவிடன் சேர்த்து நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்த 64 மெகாபிக்சல் கேமரா, 6912x9216 பிக்சல்கள் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும், 64 மெகாபிக்சல் அளவிலான இந்த கேமரா சென்சார், ஒளி குறைந்த நேரங்களில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பம் மூலம் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

முன்னதாக, சாம்சங்கின் 64 மெகாபிக்சல் மூலம் எடுக்கப்பட்ட ஒரு லேட்ஸ்கேப் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் மாதவ் சேத். அந்த பதிவில் இந்த கேமரா சென்சார் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதலில் அறிமுகமாகவுள்ளது என்ற தகவலை உறுதி செய்துள்ளார்.

இந்த ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏனினும், சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 2019-ன் இரண்டாவது பாதியில் அறிமுகமாகும் என்றால், இந்தியாவில் அதற்கு முன்பே அறிமுகமாகும் என்பது உறுதி.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, 64 Megapixel, Samsung
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
  2. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் விமர்சனம்: கிட்டத்தட்ட ‘ப்ரோ’ தரத்திலான ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்
  3. சியோமி ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோ அறிமுகம்: 1.74-இன்ச் AMOLED திரை, 21 நாட்கள் பேட்டரி ஆயுள்
  4. ஒப்போ ஃபைண்ட் X9s, விவோ X300 FE, ஒன்பிளஸ் 15: இந்திய விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  5. புதிய அடோப் மற்றும் கான்வா கனெக்டர்கள் மூலம் ஏஜென்டிக் வடிவமைப்பு உருவாக்கத்தை வழங்குகிறது கூகுளின் ஜெமினி
  6. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா மற்றும் விவோ X300 அல்ட்ரா: இதில் எது சிறந்தது?
  7. ஒப்போ ரெனோ 16 ,ரெனோ 16 கேமரா விவரம் டீஸ் செய்யப்பட்டது; இந்திய அறிமுக காலம் ஆன்லைனில் வெளியானது
  8. விவோ S தொடர் S2 மூலம் மீண்டும் இந்தியாவிற்கு: அறிமுக காலம், விலை விவரம் கசிந்தது
  9. HMD வைப் 2 5G இந்தியாவில் அறிமுகம்: 6,000mAh பேட்டரி, 128GB வரை சேமிப்பகம்: விலை, விவரக்குறிப்புகள்
  10. ஒப்போ ஃபைண்ட் X9s இந்தியாவில் அறிமுகம்: ஹாசல்பிளாட் 50MP கேமரா மற்றும் 7,025mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.