Photo Credit: Weibo/ Realme
ரியல்மீ நிறுவனம், 64 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. முன்னதாக ரியல்மீ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் சேத், இந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்தின் 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றும், அது முதலில் இந்தியாவில் தான் அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியிட்டிருந்தார். தற்போது, சீன ரியல்மீ நிறுவனம் இந்த பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, 2019ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது.
வெய்போ தளத்தில், ரியல்மீ நிறுவனம், 64 மெகாபிக்சல் கேமரா கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் 64 மெகாபிக்சல் கெமராவிடன் சேர்த்து நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த 64 மெகாபிக்சல் கேமரா, 6912x9216 பிக்சல்கள் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது. மேலும், 64 மெகாபிக்சல் அளவிலான இந்த கேமரா சென்சார், ஒளி குறைந்த நேரங்களில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பம் மூலம் 16 மெகாபிக்சல் அளவிலான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.
முன்னதாக, சாம்சங்கின் 64 மெகாபிக்சல் மூலம் எடுக்கப்பட்ட ஒரு லேட்ஸ்கேப் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் மாதவ் சேத். அந்த பதிவில் இந்த கேமரா சென்சார் பொருத்தப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதலில் அறிமுகமாகவுள்ளது என்ற தகவலை உறுதி செய்துள்ளார்.
இந்த ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏனினும், சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 2019-ன் இரண்டாவது பாதியில் அறிமுகமாகும் என்றால், இந்தியாவில் அதற்கு முன்பே அறிமுகமாகும் என்பது உறுதி.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்