இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது ரியல்மி 6! 

இந்தியாவில் Realme 6-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது ரியல்மி 6! 

ரியல்மி -6, ஹோல்-பஞ்ச் கட்அவுட் வடிவமைப்பில் முழு-எச்டி + டிஸ்பிளேவுடன் வருகிறது

ஹைலைட்ஸ்
  • ரியல்மி 6 விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது
  • இந்த போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • ரியல்மி 6 மூன்று மாறுபட்ட வேரியண்டுகளில் கிடைக்கும்
விளம்பரம்

ரியல்மி 6 இன்று இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும். கடந்த வாரம் ரியல்மி 6 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். 


இந்தியாவில் ரியல்மி 6-ன் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Realme 6-ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999-யாகவும் மற்றும் டாப்-எண்ட் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999-யாகவும் விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் Comet Blue மற்றும் Comet White கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும், இந்த விற்பனை Flipkart மற்றும் Realme.com மூலம் மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

ரியல்மி 6-ன் விற்பனை சலுகைகளில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.750 தள்ளுபடியும் அடங்கும். வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.1,084 என்ற தொகையில் no-cost EMI ஆப்ஷன்களைப் பெறலாம். ரியல்மி.காம் தளம் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை ரியல்மி 6-க்கு எதிராக எக்ஸ்சேஞ் செய்வதற்காக காஷிஃபை மூலம் எக்ஸ்சேஞ் பலன்களையும் வழங்குகிறது.


ரியல்மி 6-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்: 

டூயல்-சிம் (நானோ) ரியல்மி 6, Realme UI உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன் 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + (1080x2400 பிக்சல்கள்) அல்ட்ரா ஸ்மூத் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் MediaTek Helio G90T SoC-யால் இயக்கப்படுகிறது, அதோடு 8 ஜிபி வரை LPDDR4x ரேம் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரியல்மி 6 ஒரு குவாட் பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. கேமரா அமைப்பில், f/1.8 உடன் 64 மெகாபிக்சல் சாம்சங் GW1 முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் f/2.3 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், போரெயிட் ஷாட்ஸ்களுக்கு f/2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் நான்காம் நிலை சென்சார் ஆகியவைப் அடங்கும்.

ரியல்மி 6-ல் f/2.0 லென்ஸுடன் ஒற்றை 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சாரை வழங்கியுள்ளது. இந்த போன் Portrait Mode, Timelapse, Panoramic View, AI Beauty, HDR மற்றும் Bokeh Effect போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

ரியல்மி 6-ல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் உள்ளன, இவை இரண்டும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) ஒரு பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியவை. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். போனில் accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் உள்ளிட்ட சென்சார்கள் உள்ளன. இது 30W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 4,300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக, இந்த போன் 162.1x74.8x8.9மிமீ அளவு மற்றும் 191 கிராம் எடை கொண்டது

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Impressive performance
  • Very good battery life
  • Clean UI
  • Bad
  • Preinstalled bloatware
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Vivo-ன் போட்டோகிராபி கிங்! X300 Pro-ல என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க! ZEISS Kit கூட வருது
  2. Lava Agni 4: Home Demo Campaign மூலம் வாங்குவதற்கு முன் அனுபவம்!
  3. OnePlus 15R: Black and Green Colourways உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
  4. Poco F8 Ultra: Snapdragon 8 Elite Gen 5, 100W Charging உடன் நவம்பர் 26 அறிமுகம்
  5. X Chat: Encrypted DMs, File Sharing மற்றும் Voice/Video Calls வசதியுடன் அறிமுகம்
  6. பட்ஜெட் செக்மெண்ட்ல Realme-ன் அடுத்த என்ட்ரி! RMX5108 போன்ல என்ன இருக்கு? Geekbench லீக்ஸ்
  7. ஃப்ளாக்ஷிப் கில்லர் திரும்பி வந்துட்டான்! Poco F8 Ultra மற்றும் Pro-வின் லான்ச் உறுதி
  8. Vivo X300 வாங்க போறீங்களா? லான்ச்சுக்கு முன்னாடியே விலை லீக்! Summit Red கலர் பற்றி தெரியுமா?
  9. Oppo Find X9 வாங்க போறீங்களா? ஜாக்கிரதை! விலை ஏறுது! லேட்டஸ்ட் லீக் பத்தி தெரிஞ்சுக்கோங்க
  10. 165Hz Display, 8000mAh பேட்டரி! OnePlus-ன் அடுத்த Performance King! Ace 6T பத்தி தெரிஞ்சுக்கோங்க
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »