ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி ட்விட்டரில் ரியல்மி 6 வாட்டர்மார்க் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
 
                ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் மற்றும் சல்மான் கான் ஆகியோர் வரவிருக்கும் ரியல்மி 6 போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் வரவிருக்கும் ஸ்மார்ட்போனான ரியல்மி 6-ஐ இன்று கிண்டல் செய்தார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தின் கீழே இடதுபுறத்தில் அமைந்துள்ள ரியல்மி 6 வாட்டர்மார்க் ஒன்றை தெளிவாகக் காணலாம். ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் AI குவாட் கேமராவுடன் வரும் என்பதையும் புகைப்படம் உறுதிப்படுத்தியுள்ளது. வெளியீட்டு தேதி அல்லது விலைக் குறி என்னவாக இருக்கும் என்பதில் எந்த வார்த்தையும் இல்லை.
After bringing you the best of Tech World, now it's time to bring to you the best of Entertainment World.
— Madhav 5G (@MadhavSheth1) February 25, 2020
Bhai @BeingSalmanKhan, @realmemobiles apka swagat karta hai!
Share your excitement using #realmeSalman & get a chance to win upcoming #realme phone. pic.twitter.com/dL4GuD1j1n
குறிப்பிட்டுள்ளபடி, பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானுடன் ரியல்மியின் ஷெத் இன்று ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். கானுடன் அவரது தோற்றம் ஒருபுறம் இருக்க, புகைப்படத்தின் கீழே ஒரு சுவாரஸ்யமான வாட்டர்மார்க் இருந்தது, இது ரியல்மி 6-ன் இருப்பை உறுதிப்படுத்தியது மற்றும் இந்த போன் நான்கு கேமராக்களுடன் பின்புறத்தில் வரும் என்றும் முதன்மை ஷூட்டரில் 64 மெகாபிக்சல் தளிவுதிறன் இருக்கும் என்றும் தெரியவந்தது.
இந்த மாத தொடக்கத்தில், சிங்கப்பூரின் IMDA [இன்ஃபோகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி] தரவுத்தளத்தில் போனின் சான்றிதழ் பட்டியலிடப்பட்டதால் Realme 6 செய்திகளில் வெளிவந்தது. அந்த நேரத்தில், RMX2001 மாதிரி எண்ணைக் கொண்ட ஐஎம்டிஏ தரவுத்தளத்தில் ரியல்மி 6-ன் பட்டியலையும் கண்டுபிடிக்க முடிந்தது. அதே மாதிரி எண் பின்னர் US FCC [யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்] சான்றிதழ் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இது ஸ்மார்ட்போன் 4,300 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு வர வாய்ப்புள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இந்த போன் [162.1 x 74.8 x 9.6 மிமீ] அளவு மற்றும் எடை [191 கிராம்] போன்ற பிற விவரங்களும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, போனின் முக்கிய விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், பல கசிவுகள் ரியல்மி 6 அதன் முந்தைய போன்களின் waterdrop notch-க்கு பதிலாக மையமாக நிலைநிறுத்தப்பட்ட hole-punch-ஐ தேர்ந்தெடுக்கும் என்றும் கூறியுள்ளது.
தற்போது, Realme 5-ன் விலை ரூ.8,600 ஆகும் மற்றும் இந்த விலை வரம்பில் சிறந்த அம்சங்களை உள்ளடக்கியது. இந்த போன் குவாட் ரியர் கேமராக்களுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 NASA’s X-59 Supersonic Jet Takes Historic First Flight, Paving Way for Quiet Supersonic Travel
                            
                            
                                NASA’s X-59 Supersonic Jet Takes Historic First Flight, Paving Way for Quiet Supersonic Travel
                            
                        
                     ASIC Clarifies Crypto Rules; Stablecoins, Tokenised Assets Flagged as Financial Products
                            
                            
                                ASIC Clarifies Crypto Rules; Stablecoins, Tokenised Assets Flagged as Financial Products
                            
                        
                     SpaceX Launches 28 Starlink Satellites, Lands Falcon 9 Booster in Pacific
                            
                            
                                SpaceX Launches 28 Starlink Satellites, Lands Falcon 9 Booster in Pacific
                            
                        
                     Idli Kadai, Starring Dhanush, Now Streaming on Netflix: What You Need to Know
                            
                            
                                Idli Kadai, Starring Dhanush, Now Streaming on Netflix: What You Need to Know